அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவையில் தீர்மானம்
26 Sept 2026, 8:58 pm

அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்!

அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவையில் தீர்மானம்

திண்டுக்கல், செப்.26-அரசுத் துறைகளில் செயல்படுத் தப்படும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து, அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உறுதிப் படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தியுள்ளது.

கொடி அணிவகுப்பு

திண்டுக்கல் எம்.எஸ்.பி. ஆடிட்டோரியத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பேரவைக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. பாஸ்கரன் தலைமை வகித்தார். முன்னதாக, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியஅலுவலகம்அருகில் இருந்து கொடி அணிவகுப்பு தொடங்கி, பேரவை நடைபெற்ற அரங்கத்தை வந்த டைந்தது.

மாநில தணிக்கையாளர் ச. முபாரக் அலி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் ‘மூட்டா’ பேராசிரியர் ஆர். மனோகரன் வரவேற்றார். அகில இந்திய மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் பேரவையைத் தொடங்கி வைத்து பேசினார். திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வாழ்த்திப் பேசினார்.தலைவர்களுக்கு பாராட்டுஅரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வெ. சோமசுந்தரம், மாநிலப்பொருளாளர் சா. டானியல் ஜெயசிங் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். தொடர்ந்து மாநில நிர்வாகிகள் பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். முன்னாள் மாநில நிர்வாகிகள் சு.பார்த்திபன், சி.எஸ். கிறிஸ் டோபர் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண் ணன் நிறைவுரையாற்றினார். சங்கத் தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ம.சுகந்தி நன்றி கூறினார்.

லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்புக!

பேரவையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத் துக்கான விதிமுறைகளை உடனடியாக வெளியிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும்; அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங் களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப் புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோருக்கு காலமுறை ஊதியமும், சட்டப்பூர்வ ஓய்வூதியமும் வழங்க அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும்!

நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்; அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு வழங்கப்படாமல் உள்ள 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; கருணை அடிப்படையிலான பணி நியமனங் களை மீண்டும் 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டது.

மேலும், அலுவலக நேரத்துக்கு பிறகும் விடுமுறை நாட்களிலும் ஆய் வுக் கூட்டங்கள் நடத்துவதைத்