தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு ஊழியர் சங்க அமைப்பு தினம் மதுரையில் கொடியேற்றி கொண்டாட்டம்

6 May 2026, 9:14 pm
அரசு ஊழியர் சங்க அமைப்பு தினம் மதுரையில் கொடியேற்றி கொண்டாட்டம்

அரசு ஊழியர் சங்க அமைப்பு தினம் மதுரையில் கொடியேற்றி கொண்டாட்டம்

மதுரை, மே 6- மே 6 புதனன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 43வது அமைப்பு தினத்தை முன் னிட்டு மதுரை மாவட்டம் முழு வதும் உள்ள அரசு அலுவல கங்களில் கொடியேற்றப்பட் டது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் முழுவ தும் 33 அரசு அலுவலகங்க ளில் அமைப்புதின கொடி யேற்றம் நடைபெற்றது.

மாவட்டம், வட்டக்கிளை மற் றும் துறைச்சங்க நிர்வாகி கள், முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மையத்தின் சார் பில், நிகழ்வை சிறப்பாக ஏற் பாடு செய்து நடத்திய அனைத்து நிர்வாகிகளுக் கும் பாராட்டு தெரிவிக்கப்பட் டது.

மதுரை மாவட்டத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்து வட்டக்கிளைகளிலும் மாவட்ட ஆட்சியர் அலுவல கம், அரசு மருத்துவமனை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேலைவாய்ப்புத்துறை, தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் கொடியேற்றப்பட்டது.

மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள மாவட்டக் குழு அலுவல கத்தில் மாவட்டத் தலைவர் இரா.தமிழ் தலைமை வகித் தார். மாநிலச் செயலாளர் கா. நீதிராஜா, அகில இந்திய மற் றும் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கக் கொடிகளை ஏற்றி வைத்தார்.

மாவட்ட துணைச் செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் பரம சிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாநி லச் செயலாளர் க.நீதிராஜா, “1984ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கடந்த 43 ஆண்டுகளாக அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர் களின் உரிமைகள், பொரு ளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நலன்களுக்காக தொட ர்ந்து போராட்டங்களை முன் னெடுத்து வருகிறது.

ஆரம்ப காலங்களில் பல்வேறு தடை கள் மற்றும் அடக்குமுறை கள் இருந்தபோதிலும், சங் கம் உறுதியுடன் வளர்ச்சி பெற்றுள்ளது” என்றார். அவர் மேலும், “மத்திய அரசுக்கு இணையான ஊதி யம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்டகால போராட்டங்களின் மூலம் பெற்றெடுக்கப்பட்டன.

2003 ஆம் ஆண்டு பெருமளவில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் சங்கம் முக்கிய பங்காற்றியது” என்று குறிப்பிட்டார்.

ஓய்வூதிய பிரச்சனை கள் குறித்து அவர் கூறுகை யில், “தற்போதைய ஓய்வூ திய சிக்கல்கள் நிலவிய போதும், முன்னாள் முதல் வர் மு.க.ஸ்டாலின் அறி வித்த தமிழக பென்சன் திட் டத்தில் சில முரண்பாடுகள் இருந்தாலும், அதை ஏற் றுக்கொண்டோம்.

தற்போ தைய அரசு, அரசு ஊழியர் கள் மற்றும் தொழிலாளர் களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டியது அவசி யம்.

அதற்காக தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக் கப்படும்” என்றார்.

மேலும், உத்தரப் பிர தேசம் நொய்டா மற்றும் தில்லி பகுதிகளில் தொழிலா ளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களை குறிப் பிட்டு, “அங்குள்ள அரசு கள் கடுமையான அடக்கு முறைகளை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக நொய்டாவில் குடும்பத் தோடு கைது செய்யும் நட வடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் பாதி க்கப்பட்ட தொழிலாளர் களுக்கு நிதி உதவி அளிக்க வும், அவர்களின் போராட் டங்களுக்கு ஆதரவு தெரி விக்கவும் நாம் முன்வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

இறுதியாக, “போராடி பெற்ற உரிமைகளை பாது காப்பதுடன், புதிய உரிமை களை வெல்லவும் இந்த அமைப்பு தினத்தில் உறுதி யெடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.