717 மதுபானக் கடைகள் மூடல் தமிழக அரசின் நடவடிக்கைக்கு மாதர், வாலிபர் சங்கங்கள் வரவேற்பு
12 May 2026, 11:43 pm

717 மதுபானக் கடைகள் மூடல் தமிழக அரசின் நடவடிக்கைக்கு மாதர், வாலிபர் சங்கங்கள் வரவேற்பு

சென்னை, மே 12 - தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழி பாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளுக்கு அருகாமையில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு எடுத்துள்ள துவக்க நடவடிக் கையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வரவேற்றுள்ளன.

தொடர் போராட்டங்களின் வெற்றி: மாதர் சங்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா மற்றும் மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில், கடந்த 20 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை களுக்கு எதிராக மாதர் சங்கம் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை நினைவு கூர்ந்துள்ளனர். 500 மீட்டர் வரம்பிற்குள் இருந்த 717 கடைகளை மூடும் அரசின் இந்த முடிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நிம்மதியான வாழ்விற்கு மிக முக்கியமான முன்னேற்றமாகும்.

அதேசமயம், சில கடைகளை மூடுவது மட்டும் நிரந்தரத் தீர்வாகாது என்றும், தமிழக அரசு படிப்படியாக மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க நீண்டகாலத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தைக் குறைத்தல், மது உற்பத்திக்கு உச்சவரம்பு விதித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர் களிடையே பரவுவதைத் தடுக்கக் காவல்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையங் களையும், உளவியல் ஆலோசனை மையங் களையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தனியார் மதுபான விடுதிகளையும் மூட வேண்டும்: வாலிபர் சங்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போதையற்ற தமிழ்நாடு” என்ற முழக்கத்தோடு வாலிபர் சங்கம் முன்னெடுத்த போராட்டங் களுக்குக் கிடைத்த வெற்றியாக இதைக் கருதுவதாகத் தெரிவித்துள்ளனர். வழிபாட்டுத் தலங்கள் அருகே 276 கடைகள், கல்வி நிறு வனங்கள் அருகே 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 255 கடைகள் என மொத்தம் 717 கடைகளை அகற்ற அர சாணை வெளியிட்டது வரவேற்கத்தக்கது.

இருப்பினும், 500 மீட்டர் எல்லைக்குள் இயங்கும் 100-க்கும் மேற்பட்ட தனியார் மதுபான விடுதிகளையும் இந்த அரசாணையில் இணைத்து மூட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போதுள்ள மது சில்லறை விற்பனை விதிகளின்படி தூரக் கட்டுப்பாடுகள் மிகக் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், இந்த விதிகளை மாற்றித் தூரக் கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மூடப்படும் கடைகளுக்குப் பதிலாக புதிய இடங்களில் கடைகளையோ அல்லது தனி யார் விடுதிகளையோ திறக்கக்கூடாது என்றும், இந்த நடவடிக்கையைப் படிப்படி யாகக் கடைகளை மூடும் முன்மாதிரி நடவ டிக்கையாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணியாளர்களின் வேலையை உறுதி செய்க!

மூடப்படும் மதுபானக் கடைகளில் பணி யாற்றி வந்த ஊழியர்களின் வாழ்வாதா ரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தகுதிக்கேற்ப மாற்றுப் பணிகளை வழங்கி, அவர்களின் வேலையைத் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் ஆகிய இரு அமைப்புகளும் கோரிக்கையை முன்வைத்து உள்ளன.தொடர் போராட்டங்களின் வெற்றி: மாதர் சங்கம்தொடர் போராட்டங்களின் வெற்றி: மாதர் சங்கம்