அரசே ஆட்டோ செயலியை தொடங்க வேண்டும் அனைத்து ஆட்டோ கூட்டமைப்பு கோரிக்கை
29 Oct 2026, 11:33 pm

அரசே ஆட்டோ செயலியை தொடங்க வேண்டும் அனைத்து ஆட்டோ கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை, அக். 29 –பன்னாட்டு நிறுவனங்களின் செயலிக ளால் பொதுமக்கள் ஓட்டுநர்கள் பாதிப்பதை தடுக்க அரசே ஆட்டோ செயலியை தொடங்க வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்ட மைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக வியாழனன்று (அக். 29) சென்னையில் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ண யித்துள்ளது. இந்த கட்டணத்தை ஓலா, உபேர், ரேபிடோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் அமல்படுத்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறு வனங்களின் கட்டணக் கொள்ளையை தடுக்க அரசு ஆட்டோ செயலியை உரு வாக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,

இலவச பேருந்து பயண திட்ட த்தால் ஆட்டோக்களுக்கான சவாரி குறைந்துள்ளது. இதனால் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆந்திர மாநிலத்தில் ஆட்டோக்க ளுக்கு தகுதிச்சான்று (எப்சி) பெற ஆகும் செலவிற்கு 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதே போன்று தமிழக அரசும் வழங்க வேண்டும். பைக் டாக்ஸி தடை செய்வதோடு, புதுச்சேரி அரசை போன்று பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்வின்போது இ.உமபதி, ஜெயகோபால் (சிஐடியு), மு.சம்பத், பி.மாரியப்பன் (ஏஐடியுசி), என்.பி.துரை(ஏஐயுடியுசி), ஏ.சிட்டி பாபு (எச்எம்எஸ்), ராமஷ் (எம்எல்எப்) உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.