77 ஆவது குடியரசு தினம் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி!
30 Dec 2025, 4:07 pm
<p><strong>77 ஆவது குடியரசு தினம் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி!</strong></p>
<p>சென்னை: நாட்டின் 77-ஆவது குடியரசு தினம் தில்லி யில் உள்ள கடமைப் பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசு தினவிழா அணி வகுப்பு ஊர்வலத்தில், இந்தாண்டு தமிழ்நாடு அரசின் அலங் கார ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. பல்வேறு வகையிலும், தமிழ்நாட்டைப் புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசானது, 2022-ஆம் ஆண்டு முதல், குடியரசுத் தின விழா அணிவகுப்பிலும் கூட தமிழ்நாட் டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்தாண்டுக்கான குடியரசு தினவிழா அணி வகுப்பு ஊர்வலத்தில், தமிழ்நாடு அரசின் “பசுமை மின்சக்தி” என்ற தலைப்பில் அலங்கார ஊர்தி பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும், தமிழ்நாட்டின் ஊர்திக்கு இடமளிக்காவிட்டால், அது 2026 சட்டமன்றத் தேர்தலில்ல் தங்களுக்கு பெரும் பாதகமாக அமைந்து விடும் என்பதால், திடீரென அனுமதி கொடுத்திருக்கிறது.</p>
