முந்தய பக்கம்

இன்றுடன் முடிவுக்கு வரும் மீன்பிடித் தடைக்காலம்!

13 Jun 2026, 11:01 pm
இன்றுடன் முடிவுக்கு வரும் மீன்பிடித் தடைக்காலம்!
<p><strong>இன்றுடன் முடிவுக்கு வரும் மீன்பிடித் தடைக்காலம்!</strong></p><p>சென்னை, ஜூன் 13 - மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை, 61 நாட்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த காலக் கட்டத்தில் சென்னை காசிமேடு தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் மீனவர்களின் விசைப்படகு கள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லத் தடை செய்யப்படுகிறது. இந்த தடைக்காலம் ஜூன் 14 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நள்ளிரவு முடிவடைகிறது. இதையடுத்து, மீனவர்கள் தங்கள் படகுகளில் டீசல் நிரப்புதல், சீரமைக்கப்பட்ட வலைகளை ஏற்றுதல் என்று முன்னேற்பாட்டுப் பணிகளில் தீவிரமாக இறங்கி யுள்ளனர். படகுகளை கடலுக்குள் இறக்கி சோதனை ஓட்ட மும் நடத்தினர். 61 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் செல்வ தால் மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram