இரு மீனவ கிராம மக்களுக்கு இடையேயான மோதலை தடுத்திடுக தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
14 Mar 2026, 2:57 pm
<p><strong>இரு மீனவ கிராம மக்களுக்கு இடையேயான மோதலை தடுத்திடுக தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்</strong></p>
<p>செங்கல்பட்டு, மார்ச் 14- உய்யாளிகுப்பம் மற்றும் புதுப்பட்டினம் குப்பம் மீனவர் கிராமங்களில் ஏற்பட்ட நில உரிமை மீதான பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் அமைதி ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது இதுகுறித்து மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கூடுதல் மனுவில் தெரிவித்து இருப்பதாவது. கடந்த பிப்ரவரி 15 மற்றும் 16 அன்று நடந்த உய்யாளிகுப்பம் மற்றும் புதுப்பட்டினம் குப்பம் மீனவர் கிராமங்களில் ஏற்பட்ட நில உரிமை மீதான தகராறில் புதுப்பட்டினம் மீனவர்களால் உய்யாளி குப்பம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு மீனவ கிராமங்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இரு பக்கமும் தலா 12 நபர்களை பிணையில் வர முடியாத சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். இதனால் அந்த இரு கிராமத்தி லும் உள்ள ஆண்கள் கடந்த 23 நாட்களாக தலைமறைவாக உள்ள னர். மேலும் கிராமத்தினரின் தொழில், வேலை, என அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது பள்ளி முழு ஆண்டு தேர்வு காலம் என்பதால் குழந்தைகளின் கல்வியும் கேள்விக்குறி யாகி உள்ளது. ஆண்கள் இல்லாத கார ணத்தால் வருமானத்திற்கு வழியின்றி தங்கள் பிள்ளைகளுடன் பெண்கள் தவித்து வருகின்றனர். மேலும் காவல்துறையினர் இரு கிராமங்கள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் மீதமுள்ள பெண்கள் குழந்தைகள் வயதா னவர்கள் மிகவும் ஒருவித பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட இரு கிராம மக்கள் நிலம் சார்ந்த பிரச்சனையை நீதிமன்றம் சென்று பார்த்துக் கொள்ளட்டும், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் காலதாமதம் இன்றி உடனடியாக இரு கிராமங்களிலும் அமைதியை ஏற்படுத்திடவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படா வண்ணம் ஜாமினில் வெளிவர நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பு, சிஐடியு சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர் இந்நிகழ்வின் போது தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில இணைச் செயலாளர் இரா.லோகநாதன் மாநில பொருளாளர். ஜெய்சங்கர், சிபிஎம் திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் பி.கே.ரபிக் . வட்ட குழு உறுப்பினர்கள். சி.செல்வகுமார் எம்.குமார். செபாஸ்டின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>
<p> </p>
