தமிழகத்தில் சன்னரக அரிசி ரூ.5 உயர்வு
21 Jun 2026, 9:04 pm
<p><strong>தமிழகத்தில் சன்னரக அரிசி ரூ.5 உயர்வு</strong> </p><p>சென்னை, ஜூன் 21 - கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் சன்னரக அரிசி விலை, கிலோவுக்கு, 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், மோட்டா ரக அரிசிக்கான நெல் அதிகளவில் விளைகிறது. இதை, பொது விநியோக திட்டத்திற்காக, அரசு கொள்முதல் செய்கிறது. சன்னரக அரிசி விளைச்சல் குறைவு. தமிழக அரிசி தேவை ஆண்டுக்கு 91 லட்சம் டன்; அரிசி உற்பத்தி 75 லட்சம் டன். இதில், 5 லட்சம் டன் கேரளத்திற்கு அனுப்பப்படுகிறது. எனவே, தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை 21 லட்சம் டன்னாக உள்ளது. இதற்காக ஆண்டுக்கு 30 லட்சம் டன் உயர்ரக சன்ன அரிசி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமி ழகத்திற்கு வருகிறது. கர்நாடகாவில் சில இடங்களில் போதிய மழை பெய்யாததால், உயர் ரக சன்ன நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டு, இந்த நெல் வரத்து குறைந்துள்ளதால், தற்போது தமிழகத்தில் விலை உயர்ந்துள்ளது. </p>
