தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

15 Feb 2026, 3:03 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல்  பிப். 23இல் வெளியீடு

சென்னை, பிப். 15- தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ர வரி 23-ஆம் தேதி வெளியிடப் படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தர வின்படி, வாக்காளர் பட்டிய லில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து, பாதிக்கப்பட்ட நபர்கள் உரிய ஆவணங் களுடன் விளக்கம் அளிக்கப் பத்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. 01.01.2026-ஆம் தேதியைத் தகுதி நாளா கக் கொண்டு மேற்கொள் ளப்பட்டு வரும் ‘சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளின்’ (SIR) ஒரு பகுதியாக இந்த இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ர வரி 17-ஆம் தேதி வெளியா கும் என அறிவிக்கப்பட்டி ருந்த நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின் பற்றுவதற்காக தற்போது இந்தப் பணி பிப்ரவரி 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப் பட்டுள்ளது.

கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு

நாகப்பட்டினம், பிப். 15 நாகப்பட்டினம் மாவட் டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன  உயிரின சரணாலயப் பகுதி யில் ஆண்டுதோறும் நடை பெறும் பறவைகள் கணக்கெ டுப்புப் பணி ஞாயிற்றுக்கிழ மை தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இறுதி அல்லது பிப்ர வரி முதல் வாரத்தில் வெளி நாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகளின் வருகையைக் கணக்கிடுவது வழக்கம். இம்முறை, இப்பணியில் ஈடு படும் வனத்துறை அதிகாரி கள் மற்றும் தன்னார்வலர் களுக்குச் சனிக்கிழமை சிறப்புப் பயிற்சி அளிக்கப் பட்டது. குழுக்களாகப் பிரிந்து சரணாலயத்தின் பல் வேறு பகுதிகளில் பறவை களை உன்னிப்பாகக் கண்கா ணித்துக் கணக்கெடுக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள் ளனர். இதன் மூலம் இவ்வா ண்டு வருகை தந்துள்ள வல சைப் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் இனங்கள் குறித்த முக்கியத் தரவுகள் சேகரிக்கப்பட உள்ளன.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

சென்னை, பிப். 15- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் திங்கட்கிழமை (பிப். 16) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகைக்கு அரு கிலுள்ள இந்தியப் பெருங் கடலின் கிழக்குப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடு க்குச் சுழற்சி காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிப்ரவரி 18 வரை வறண்ட வானிலையே நிலவும். இருப்பினும், பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழ கத்தின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.