தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உத்தரவுகளை காட்டி உரிமைகளை பறிக்காதே - விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

5 Nov 2026, 12:42 am
உத்தரவுகளை காட்டி உரிமைகளை பறிக்காதே - விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

உத்தரவுகளை காட்டி உரிமைகளை பறிக்காதே - விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

உடுமலை, நவ.4-விவசாயிகளுக்கு அடையாள அட்டையை உடனடியாக வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதனன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் உத்தரவுகளை காரணம் காட்டி விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். அரசு சலுகை மற்றும் பயிர் காப்பீடு செய்ய அடையாள அட்டை கட்டாயம் என்றால், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் குத்தகை, ஒத்தி உள்ளிட்ட பல்வேறு வகையில் புறம்போக்கு நிலங்கள், வெட்டுக்காடு விவசாய நிலங்கள், வனங்கள், மலை அடிவாரங்கள், தோப்பு மற்றும் இனாம் நிலங்களில் பயிர் செய்து வரும் விவசாயிகள் என பல லட்சம் விவசாயிகள் இன்றளவும் அடையாள அட்டை பெற முடியாத நிலை உள்ளது. எனவே, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய முறையின்படி அரசின் சலுகைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், உடுமலை ஒன்றியச் செயலாளர் அருண் பிரகாஷ், குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் விஜயகுமார், மடத்துக்குளம் தாலுகா செயலாளர் எம்.எம். வீரப்பன், உடுமலை நகரச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

இதேபோன்று, அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் ஏ. முத்துரத்தினம் தலைமை தாங்கினார். இதில் அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆர். குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். வெங்கடாசலம், வை. பழனிச்சாமி, திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ். அப்புசாமி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க செயலாளர் ஆர். பழனிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் அமைப்பில் ஒன்றியச்செயலாளர் எம். குமாரசாமி, பல்லடம் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம், திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவர் ரங்கசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் சண்முகம், சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கட்டிட சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, அவிநாசி ஒன்றியச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் என்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், மாவட்ட துணைத்தலைவர் கே.என்.மல்லையன், மாவட்ட துணைச்செயலாளர்கள் கே.முனியப்பன், கே.எல்லப்பன், உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் ஏ.நேரு தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அம்புரோஸ், வஞ்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் எம்.குமார் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆர்.சின்னசாமி, துணைத்தலைவர்கள் கே.அன்பு,ஜே.பி.சுப்பிரமணி, டி.ஆர்.சின்னசாமி, பி.சக்கரவேல் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.