முந்தய பக்கம்

விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்க: தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

20 Jul 2026, 9:57 pm
விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்க:  தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
<p><strong>விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்க: தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!</strong></p><p>மதுரை, ஜூலை 20: தமிழக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதி யின்படி, விவசாயிகளின் அனைத்துப் பயிர்க்கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, மதுரை நாகமலை புதுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் ஜி.சந்தானம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி பேசி னார். தொடர்ந்து மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன், மெய்யழகு, விரு மாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடரா ஜன் சிறப்புரையாற்றினார். இதில் கே.முரு கேசன், எம்.செந்தில்குமரன், பி.அய்யாவு, ந. ராதாகிருஷ்ணன், மு.நடராஜன், கே.பி.மகா ராஜன், ஆ.சி.சி.சுப்பரமணி உள்ளிட்ட நிர்வா கிகள் பலர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram