தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறுமைப்படுத்த வேண்டாம்!

26 May 2026, 9:22 pm
சிறுமைப்படுத்த வேண்டாம்!

சிறுமைப்படுத்த வேண்டாம்!

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திடும் தமிழக அரசின் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியையும் நிதி நிலைமை யையும் காரணம் காட்டி, பெயரளவில் ஒரு தள்ளுபடி திட்டத்தை மாநில அரசு திங்களன்று அறிவித்திருக்கிறது. இது ஏற்கெனவே பல்வேறு பாதிப்புகளுடன் கடன் சுமையில் இருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவுவதாக இல்லை என்ற மனக்குறையே அவர்களிடத்தில் நிலவுகிறது.

5 ஏக்கர் என்பது 2 ஹெக்டேர் நிலம். இதற்கு கூட்டுறவு வங்கிகளில் டெல்டா மாவட்டங்களில் 2.5 ஏக்கருக்கு கடன் பெற்றால் ரூ.91.250 வரும். பிற மாவட்டங்களில் ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் அளவே கிடைக்கும். அதாவது 3 ஏக்கர் நிலமிருந்தால்தான் 1 லட்சம் ரூபாய் கடன் கிடைக்கும். இந்நிலையில் குறு விவசாயி ரூ.50 ஆயிரம் கடன் பெற்றிருந்தால் முற்றிலும் தள்ளு படி என்றும், அதற்கு மேல் பெற்றிருப்பவர்க ளுக்கு 10 ஆயிரத்துக்கு ஒரு விகிதம் என்றும், ஒரு லட்சத்துக்கு மேல் பெற்றிருந்தால் வெறும் 5 ஆயிரம் தள்ளுபடி என்றும் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாகும்.

இதிலும் சிறு விவசாயிகளுக்கு அந்த விகி தத்திலும் பாதியளவே தள்ளுபடி அறிவித்திருப் பது மிகவும் கொடுமையானதாகும். 1 லட்சம் கடன் பெற்றவருக்குத் தரும் 5 ஆயிரம் தள்ளுபடி வட்டிக்குக்கூட கட்டி வராது என்பது விவசாயி களை மிகவும் சிறுமைப்படுத்துவதாகும்.

ஒன்றிய அரசு கடந்த 12 ஆண்டுகளாக விவ சாய விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை வழங்கவில்லை. அது மட்டுமின்றி நெல்லின் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சத வீதமாகவும் உயர்த்தவில்லை. விவசாயச் செலவு கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில் விதை, உரம் உள்ளிட்ட இடுபொருள்களின் விலை உயர்ந்து கொண்டேயிருக்கும் நிலையில் விவசாயி நிரந்தரக் கடனாளியாகவே காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்.

கடன் வாங்கிப் பயிரிட்டவனும் மரமேறிக் கைவிட்டவனும் ஒன்று என்பது பழமொழி. ஊருக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளை கூறு போட்டு இப்படி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்வது அநியாயம். மேற்கு ஆசியப் போர்ப் பதற்றத்தால் உரவிலை உயர்வு, அமெரிக்க ஒப்பந்தத்தால் வேளாண்மையே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில் அவர்களை தமிழக அரசு மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம்.

5 ஏக்கருக்கு கீழ் உள்ளவர்களுக்கு முழுமை யான கடன் தள்ளுபடியும் அதற்கு மேல் உள்ள வர்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும் வழங்கு வதே உழவர்களுக்கு உதவும் செயலாகும். அதை தமிழக அரசு செய்வதே விவசாயி களைப் பெருமைப்படுத்துவதாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.