தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு

2 Jul 2026, 1:51 am
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர்  மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு
<p><strong>தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு</strong></p><p>திருப்பூர், ஜூலை 1 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 8 ஆவது மாநாடு வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி தாரா புரம் சிவரஞ்சனி திருமண மண்டபத்தில் நடைபெறுகி றது. அம்மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த வர வேற்புக்குழு அமைப்பு கூட்டம் அண்மையில் தாராபுரம் அலுவலகத்தில் எஸ்.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில், மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பொருளாளர் அ.பாலதண்டபாணி உள்ளிட் டோர் உரையாற்றினர். பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டத் தலைவர் பொ.வேலுச்சாமி, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ.லெனின், ஒன்றியச் செயலாளர் என்.குப்புசாமி, தலைவர் பாலசுப்பிரமணி யன், தாலுகா தலைவர் நடராஜ், தொழிற்சங்க தலைவர்கள் பொன்னுச்சாமி, மேகவர்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், வரவேற்புக்குழு தலைவ ராக முத்துசாமி, செயலாளராக வெங்கட்ரா மன், பொருளாளராக என்.கனகராஜ், துணைத் தலைவர்களாக லெனின்குமார், நடராஜ், துணைச்செயலாளர்களாக குப்புசாமி, மனோ கரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.