முந்தய பக்கம்

விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு

15 Jun 2026, 12:29 am
விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு
<p><strong>விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு</strong></p><p>நாமக்கல், ஜூன் 14- விவசாயிகள் சங்கத்தின் திருச்செங்கோடு ஒன்றிய மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றிய 6 ஆவது மாநாடு ஞாயிறன்று மண்கரட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. ஒன்றியத் தலை வர் ஏ.ஆர்.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற மாநாட்டின் கொடியை டி.பெருமாள் ஏற்றி வைத்தார். ஒன்றியச் செயலா ளர் கு.பூபதி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட துணைததலைவர் கே.பூபதி பேசி னார். மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ். நல்லாகவுண்டர், ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் சங்க தலை வர் எம். கணேஷ் பாண்டியன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் பி.தங்க ரத்தினம், சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.சீனிவாசன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆர்.மனோகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய முழு கடன்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் ஒன்றியத் தலைவராக ஏ.ஆர்.முத்துசாமி, செயலாளராக கு.பூபதி, பொருளாளராக பி.ஜீவானந்தம் மற்றும் 18 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாவட்டச் செயலாளர் பி. பெருமாள் உரை யாற்றினார். முடிவில், பி.ஜீவானந்தம் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram