தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாடு 200 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைப்பு
21 Jul 2026, 9:18 pm
<p><strong>தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாடு 200 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைப்பு</strong></p><p>தூத்துக்குடி, ஜூலை 21 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-ஆவது மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம், திங்களன்று (ஜூலை 20) தூத்துக்குடியில் மாவட்டத் தலைவர் ஆர்.ராகவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், பொருளாளர் கே.பி. பெரு மாள், மாவட்டச் செயலாளர் பி. புவிராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறு முகம், ஆர். ரசல் (சிஐடியு), பி. பூமயில் (மாதர்), கு. ரவீந்திரன் (விதொச), தினேஷ்குமார் (வாலிபர்) ஆகியோர் பங்கேற்றனர். விவசாயிகள் சங்க நிர்வாகி கள் மற்றும் சகோதர அமைப்புகளின் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், மாநில மாநாட்டுக்கு 200 பேர் கொண்ட வரவேற்புக்குழுவும், 50 பேர் கொண்ட நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். வரவேற்புக் குழுத் தலைவராக கே.பி. ஆறுமுகம், செயலாள ராக பி. புவிராஜ், பொருளாளராக ஆர்.ராகவன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.</p>
