விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
31 May 2026, 10:57 pm
<p><strong>விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>நாமக்கல், மே 31- விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட் டம், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய 2 ஆவது மாநாடு, வெள்ளப்பாறையில் ஞாயிறன்று நடை பெற்றது. ஒன்றியத் தலைவர் இ.கோவிந்த ராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் துவக்கவுரையாற்றி னார். கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் நல்லாகவுண்டர், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரவி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட் டில், பூமடக்காடு மற்றும் தோப்புக்காடு பகுதி களிலுள்ள பெரிய வாய்க்காலை தூர்வார வேண்டும். கிளை வாய்க்கால்களை சீர மைத்து விவசாயிகள் பயனடைய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எளையாம் பாளையத்தில் நெல் கொள்முதல் நிலைய களத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் ஒன்றியத் தலைவராக ஏ.சுதாகர், செயலாளராக என்.கருப்பண்ணன், பொரு ளாளராக மேகநாதன், துணைத்தலைவர்க ளாக ஆர்.ரவி, கே.சண்முகம், துணைச்செய லாளர்களாக இ.கோவிந்தராஜ், கே.முருகே சன் உள்ளிட்ட 21 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலா ளர் பி.பெருமாள் நிறைவுரையாற்றினார்.</p>
