தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஏரியூர் ஒன்றிய மாநாடு
9 Aug 2026, 12:51 am

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஏரியூர் ஒன்றிய மாநாடு

தருமபுரி, ஆக. 8-தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஏரியூர் ஒன்றிய மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஏரியூர் ஒன்றிய 3 ஆவது மாநாடு ஏரியூரில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் எம். குமார் தலைமை வகித்தார். நிர்வாகி மாதப்பன் சங்க கொடியேற்றிவைத்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுனன் துவக்கி வைத்து பேசினார்.

ஒன்றியச்செயலாளர் எம். தங்கராஜ் வேலை அறிக்கை வைத்து பேசினார். முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் வி. மாதன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.அன்பு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் என். பி. முருகன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.இதில், காவேரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஏரிகளுக்கும் நிரப்ப வேண்டும். ஒகேனக்கல் குடிநீரை அனைத்து கிராமங்களுக்கும் சீராக வழங்க வேண்டும்.

ஏமனூர் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும். அதேபோல் தொன்னகுட்ட அள்ளி ஏமனூர் கிராமங்களில் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

தருமபுரி மாவட்டங்களில் மழை பொய்த்துபோய் உள்ளதால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வனவிலங்கு தொல்லையிலிருந்து விவாசயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில். ஒன்றியத் தலைவராக கே.சேப்புரு, செயலாளராக ரங்கநாதன், பொருளாளராக ராமசாமி உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.

விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் கே. என். மல்லையன் நிறைவுரையாற்றினார்.