தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

20 Nov 2025, 3:46 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

திருப்பூரில் நவ.26இல் கல்விக்கடன் முகாம்

திருப்பூர், நவ.20 – திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிக ளுக்கு கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க சிறப்பு கல்விக்க டன் முகாம் நவம்பர் 26ஆம் தேதி புதன்கிழமை நடத்தப்படு வதாக மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள் ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண்  20இல் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி  வரை இம்முகாம் நடைபெறும். இதில் மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் மாவட்டத்தின் அனைத்து  வங்கிகள் பங்கேற்கின்றன. கல்விக்கடன் பெற விரும்பும்  மாணவர்கள் www.pmvidyalaxmi.co.in என்ற இணைய தளத்தில் தங்கள் விண்ணப்பத்தை, தேவைப்படும் ஆவ ணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இம்முகாமில் அந்த விண்ணப்ப நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். மாணவர் மற்றும் பெற்றோரின் இரு புதிய புகைப்படம், வங்கி கணக்குப் புத்தக நகல், ஆண்டு  வருமானச் சான்று நகல், சாதிச்சான்று நகல், பான் கார்டு நகல்,  ஆதார் அட்டை நகல், கல்விக் கட்டண விபரம், பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றி தழ், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும்  கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கல்லூரி சேர்க்கைக்கான ஆணை போன்ற ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் என  ஆட்சியர் மனிஷ் நாரணவரே கூறியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

அவிநாசி நவ.20- அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண்கள்  பாதுகாப்பு விழிப்புணர்வுக்கூட்டம் புதனன்றுநடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி  சந்தோஷ் கூட்டத்திற்குத் தலைமையேற்று உரை நிகழ்த்தி னார். இதில் பெண்களுக்கான பாதுகாப்பின் அவசியம், பாலி யல் வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டங் கள், பணியிடப் பாதுகாப்பு, போக்சோ சட்டம், இளம் பெண்க ளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் குழந்தை கடத் தல் உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. பாதிக்கப்படும் பெண்கள் அல்லது பெண் குழந்தைகள் 100, 1098, 181 ஆகிய தொலைபேசி உதவி எண்களை 24 மணி  நேரமும் அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியா ளர்கள், கிராம செவிலியர்கள், அரசுப் பள்ளி தலைமை ஆசிரி யர்கள், சுய உதவிக் குழு பணியாளர்கள், காவல்துறை ஆய் வாளர்கள், சட்ட வல்லுநர்கள், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் நலக்குழு  உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தரமான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

உடுமலை, நவ.20- உடுமலை மற்றும் மடத்துக்குளத்தில் தரமான உரம் மற்றும் பூச்சி மருந்துகளை நியாமான விலையில் கிடைக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து பருவ மழை  பெய்ய தொடங்கியதால், அமராவதி, திருமூர்த்தி அணைக ளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால்  ஆற்றுப்பகுதி மற்றும் குளத்துப்பாசன விவசாயிகள் நெல்  மற்றும் கரும்பு பயிர் செய்தும், மீதம் உள்ள நிலப்பரப்பில்  மக்காச்சோளம் மற்றும் சிறு தானியங்கள் பயிரிட துவங்கி  உள்ளனர். ஏற்கனவே கடந்த காலங்களில் பல தனியார் விதை  கம்பெனிகளின் தரம் இல்லாத விதை மற்றும் உரங்களால்  போதிய விளைச்சல் இல்லாமல் பெரிய இழப்பு ஏற்பட்டது.  இதனால் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரம்,  மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை தரமாகவும், நியாயமாக வும் கிடைக்க வேளாண் துறை அலுவர்கள் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறுகை யில், கடந்த காலங்களில் தரமான விதைகள், உரங்கள் மற்றும்  மருந்துகள் குறித்து அறியாமல், பெரிய இழப்பு ஏற்பட்டது.  விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு உள்ளிட்ட எந்த நிவாரணமும்  கிடைக்வில்லை. இந்நிலையில் பருவ மழை துவங்கியுள்ளது.  எனவே என்ன வகையான பயிர் செய்தால் நன்றாக இருக்கும்  என்றும், அதற்கான ஆலோசனைகளை வழங்க உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதியில் இருக்கும் வேளாண் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றனர்.

கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு: பவர் டேபிள் வேலை நிறுத்த போராட்டம் முடிவு

திருப்பூர், நவ.20- கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதை அடுத்து, 13 நாட்களாக நடை பெற்று வந்த பவர் டேபிள் நிறுவனங்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை உற் பத்தி நிறுவனங்களுக்கு, ஜாப் ஒர்க் முறை யில் தையல் வேலை செய்து தரும் பவர்  டேபிள் நிறுவனங்களுக்கு 4 ஆண்டுகளுக்கு  ஒரு முறை சம்பள ஒப்பந்தம் மேற்கொள்ளப் படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்படுத் திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட வேண் டிய 7 சதவீத கூலி உயர்வை ஒரு சில நிறுவனங் கள் வழங்காமல் இழுத்தடித்து வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூலி உயர்வு  உடனடியாக அமல்படுத்த வேண்டும் என  கடந்த 7 ஆம் தேதி முதல் கூலி உயர்வு வழங் காத நிறுவனங்களிடம் இருந்தும் புதிய ஆர் டர்களை பெறாமல், செய்து முடித்த ஆர்டர் களை திருப்பி ஒப்படைக்காமல் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நவ.13  தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இப் போராட்டம் 13 நாட்க ளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியா ளர்கள் சங்க அலுவலகத்தில் பவர் டேபிள் உரி மையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில், கடந்த ஆண்டு (2024) கொடுத்த அதே கூலி உயர்வை  இந்த ஆண்டிலும் கொடுப்பது. செவ்வா யன்று முதல் கம்பெனிகளில் டெலிவரி எடுக் கின்ற கட்டுகள் மற்றும் டஜன்களுக்கு இந்த  கூலி உயர்வு பொருந்தும். வேலை நிறுத் தத்தை வாபஸ் பெறுவது என ஒருமனதாக  தீர்மானிக்கப்பட்டது. மேலும் மாறுபட்ட  கருத்து ஏற்பட்டால், அந்த கம்பெனிகளுக்கு  மட்டும் கூட்டு குழு மூலம் பேசி முடிவு செய்யப் படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் தாமோ தரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்த னர். அதேபோல் பவர் டேபிள் உரிமையாளர் கள் சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் நந்த கோபால், செயலாளர் முருகேசன், பொருளா ளர் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். அதன்படி பவர் டேபிள் உற்பத்தி நிறு வனங்கள் வியாழனன்று முதல் வழக்கம் போல் வேலையை தொடங்கின.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.