தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
16 Jun 2026, 10:34 pm

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 16 - கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடி அறி விப்பை மறுபரிசீலனை செய்து, முதல மைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செய லாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: மாநில அரசு கூட்டுறவு வங்கிகளில் சிறு- குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறி விப்பை 25.05.2026 அன்று முதலமைச்சர் வெளியிட்டார்.

அதன்படி ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கியுள்ள குறு விவசாயிகளுக்கு முழுவதும் தள்ளுபடி, ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள சிறு விவசாயிகளுக்கு 50 சத வீதம் தள்ளுபடி என்றும், இதற்கு மேல் கூடுத லாக கடன் பெற்ற ஒவ்வொரு பத்தாயிரத்துக் கும் குறிப்பிட்ட தொகை தள்ளுபடி என்றும் அறிவித்தார்.

அதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மறுநாள் 26.05.2026 அன்று தமிழ்நாடு முழு வதும் சிபிஎம், சிபிஐ தமிழ்நாடு விவசாயி கள் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடை பெற்றது.

அதன் பிறகு 02.06.2026 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில நிர்வாகிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து, தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சத வீதம் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினோம்.

அதனடிப்படையில் செவ்வாயன்று (16.06.2026) 75,000 ரூபாய் வரை பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தும், 75,000 ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற வர்களுக்கு ரூ.35,000 தள்ளுபடி என்றும் அறி விப்பு வெளியிட்டுள்ளார். இது ஒரு சிறிய முன்னேற்றம்.

ஆனால் தேர்தல் வாக்குறுதிப் படி முழுமையாக கடன் தள்ளுபடி செய்தால் தான் அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். எனவே, மாநில அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்து தேர்தல் வாக்குறுதிப் படி கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி 22.06.2026 அன்று சென்னையிலுள்ள மாநில கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு சிபிஎம், சிபிஐ தமிழ்நாடு விவசாயிகள் சங்கங் களின் சார்பில் தொடர் முழக்கப் போராட் டம் நடைபெறவுள்ளது என தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.