தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள் சங்க எலச்சிபாளையம், ஊத்துக்குளி மாநாடுகள்

19 Jul 2026, 10:43 pm
விவசாயிகள் சங்க எலச்சிபாளையம், ஊத்துக்குளி மாநாடுகள்

விவசாயிகள் சங்க எலச்சிபாளையம், ஊத்துக்குளி மாநாடுகள்

நாமக்கல், ஜூலை 19- தமிழ்நாடு விவசாயிகள் சங்க எலச்சிபாளையம் மற்றும் ஊத் துக்குளி இடைக்கமிட்டி மாநாடு களில் நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் ஒன்றிய 3 ஆவது மாநாடு, ஞாயிறன்று மோளிப் பள்ளியில் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பெரியசாமி தலைமை யில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் வி.கே.வி.வனிதா கொடியேற்றி வைத்தார். மாவட்டப் பொருளாளர் ஈ.கோவிந்தராஜ் துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் ஆர்.குப்புசாமி அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் ஆர். வேலாயுதம், மாவட்ட உதவிச்செய லாளர் என்.ஜோதி, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.முத்துசாமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம் மாநாட்டில், மேட்டூர் அணையிலி ருந்து வெளியேறும் உபரிநீரை உட னடியாக திருமணிமுத்தாற்றில் இணைக்க வேண்டும். மோளியப் பள்ளி ஏரியில் உள்ள சீமை கரு வேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும். விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடன் கள் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சங்கத்தின் ஒன்றியத் தலைவராக ஆர்.குப்புசாமி, செய லாளராக சி.பெரியசாமி, பொருளா ளராக ஓடக்காடு சி.பெரியசாமி உட் பட 15 ஒன்றியக்குழு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி பேசி னார். முடிவில், சி.பெரியசாமி நன்றி கூறினார்.

ஊத்துக்குளி – திருப்பூர்

இதேபோன்று, விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகா 8 ஆவது மாநாடு, ஊத்துக்குளியிலுள்ள தனி யார் திருமண மண்டபத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வெங்கடாச லம் கொடியேற்றி வைத்தார். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சின்னச்சாமி துவக்கவுரையாற்றினார். தாலுகா செயலாளர் கொளந்தசாமி அறிக்கையை முன்வைத்தார். மாதர் சங்க மாவட்ட துணைத்தலை வர் கு.சரஸ்வதி, விவசாயத் தொழி லாளர் சங்க தாலுகா செயலாளர் பிர காஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இம்மாநாட்டில், விவசாய மின் இணைப்புக்கு தட்கல் முறையில் தொகை செலுத்தியவர்களுக்கு மின் இணைப்பு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவிநாசி - அத்திக் கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண் டும். ஊத்துக்குளி வட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களில் காலி யாக உள்ள கால்நடை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலைவராக கோபாலகிருஷ்ணன், செயலாளராக கொளந்தசாமி, பொருளாளராக சத்தியமூர்த்தி, துணைத்தலைவராக முத்து, துணைச்செயலாளராக முருகே சன் உட்பட 15 தாலுகாக்குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் நிறைவுரை யாற்றினார். முருகேசன் நன்றி கூறி னார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.