தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சரித்திரம் படைத்த சங்கத்தின் 31வது மாநில மாநாடு தூத்துக்குடியில் சங்கமிப்போம்! - சாமி.நடராஜன்

25 Sept 2026, 7:50 pm
சரித்திரம் படைத்த சங்கத்தின் 31வது மாநில மாநாடு  தூத்துக்குடியில் சங்கமிப்போம்! - சாமி.நடராஜன்

சரித்திரம் படைத்த சங்கத்தின் 31வது மாநில மாநாடு தூத்துக்குடியில் சங்கமிப்போம்! - சாமி.நடராஜன்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31வது மாநிலமாநாடு எதிர்வரும் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் தூத்துக்குடி மாநகரில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1998 ஆம்ஆண்டு டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் கோவில்பட்டியில் சங்கத்தின் 24வது மாநில மாநாடு நடைபெற்றுள்ளது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்தூத்துக்குடி மாவட்டத்தில் 31வது மாநில மாநாடுமிகுந்த எழுச்சியுடன் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் சங்கத்தின் உதயம்

தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சி தொடங்கி, ஆங்கிலேய ஆட்சி வரை நிலங்கள், மன்னர்கள் மற்றும் அவர்களுடைய ஏஜெண்டுகளாகச் செயல்பட்ட நிலப்பிரபுக்கள், ஜமீன்தாரர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. அன்றைய காலகட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம், இராமநாதபுரம் சமஸ்தானம்நீங்கலாக மாநிலம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்கள் (பண்ணையார்கள், ஜமீன்தாரர்கள்) கைகளில்60 லட்சம் ஏக்கர் நிலம் இருந்தது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நிலத்தில் 40சதவீத நிலம் இவர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்த நிலங்களில் குத்தகைச் சாகுபடி செய்யும்விவசாயிகளாகப் பெரும்பகுதி விவசாயிகள் மாநிலம் முழுவதும் இருந்தனர். ஒரு ஜமீன் என்றால்அவருக்குச் சொந்தமான நிலங்களை மட்டும் குறிப்பிடமாட்டார்கள். ஒட்டுமொத்த கிராமத்தையே ஜமீன் கிராமம் என்றுதான் கூறுவார்கள்.

நிலவுடமைக் கொடுமையிலிருந்து, குத்தகை விவசாயிகள், நிலமற்ற விவசாயிகள், விவசாயத் தொழி

லாளர்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்கிட “உழுபவருக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கத்துடன் 1936-ல்துவங்கப்பட்ட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஒரு அங்கமாகத் தமிழ்நாட்டில் 1943-ல்

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் தென்பரை கிராமத்தில்தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் துவங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் விவசாயிகளை அணிதிரட்டிட தோழர்கள் பி.சீனிவாசராவ், மணலி கந்தசாமி, கே.பி.நடராஜன், ஆர்.அமிர்தலிங்கம், களப்பால் பெரியகுப்பு, சிவகுருநாதபிள்ளை, டாக்டர் அண்ணாஜி, லலிதா அண்ணாஜி, மணலூர் மணியம்மா, டி.ஆர்.விஸ்வநாதன், எஸ்.மாணிக்கம், டாக்டர் சிற்றம்பலம், பாப்பாங்குளம் சொக்கலிங்கம் பிள்ளை, எம்.கே.எம்.மீரான், பொன்னம்பலக் கவுண்டர் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தினர். இவர்களுக்கு உறுதுணையாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நெடுங்காடி ராமச்சந்திரன் அவர்கள் தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்து மாநிலம் முழுவதும் விவசாயிகளை அமைப்பு ரீதியாகத் திரட்டிட உதவி செய்தார். இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில அமைப்புஉருவானது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொன்னம்பலக் கவுண்டர் தலைவராகவும், கம்யூனிஸ்ட் தலைவரான பி.சீனிவாசராவ் செயலாளராகவும் கொண்ட மாநில அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 1944 ஆம் ஆண்டு மே 3, 4தேதிகளில் மன்னார்குடியில் நடைபெற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் பி.சீனிவாசராவ் தலைவராகவும் மணலி கந்தசாமி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர் போராட்டங்களும் - புதிய சட்டங்களும்

சங்கம் முதலில் துவங்கப்பட்ட தென்பரை கிராமமே உத்திராபதி மடத்திற்குச் சொந்தமானதாகும். நிலங்களில் சாகுபடி செய்து வந்த குத்தகை விவசாயிகள் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு வேண்டுமென்று கோரிக்கை வைத்து போராட்டம் துவங்கியது. மடத்து நிர்வாகம் விளைச்சலில் 18 வாரம்தான் தர முடியும், இல்லையென்றால் விவசாயிகள் நிலத்தை அறுவடை செய்யக்கூடாது எனத்தடுத்துவிட்டது. விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாகுபடி செய்த விவசாயிகளை அறுவடை செய்யச் சொல்லிஅறிவிப்பு செய்யப்பட்டு முழுவதுமாக அறுவடை செய்யப்பட்டது விவசாயிகள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது. மடத்து நிர்வாகம் பல்வேறு வகையில் குத்தகை விவசாயிகளுக்கும், விவசாய சங்கத்தலைவர்கள் மீதும் தாக்குதலை நடத்தியது. அனைத்தையும் முறியடித்து விவசாயிகள் மத்தியில் ஒரு புதியநம்பிக்கையைத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாகத்தான் 1944-ல் பண்ணையார்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற முதல் பேச்சுவார்த்தைக் கூட்டம் களப்பால் கிராமத்தில் அன்றைய தஞ்சை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகாதேவன் தலைமையில் நடைபெற்றது. அதில் 4 ஒப்பந்தங்கள் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சாணிப்பால், சவுக்கடி நிறுத்தப்படுதல்,பண்ணையாள் கூலி உயர்வு, அறுவடை கூலி உயர்வு, குத்தகை விவசாயிகள் அறுவடை செய்த கதிரை அதுவரை பண்ணையார் களம்எங்கு உள்ளதோ அங்கு கொண்டு வந்துதான் கதிர்அடிக்க வேண்டும் என்பதை மாற்றி குத்தகை விவசாயிகள் அவரவர் களத்திலேயே கதிர் அடிக்கலாம் என்ற உடன்பாடுகள் ஏற்பட்டன. இது விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

1943-ல் துவங்கப்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நாடு விடுதலை பெற்ற பின்பும் நிலமற்ற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்கிட வேண்டும், குத்தகை விவசாயிகளின் நில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், நிலக்குவியலை உடைத்து நில விநியோகம் செய்திட நில சீர்திருத்த சட்டம், இனாம் ஒழிப்பு சட்டம் உள்ளிட்டவற்றைச் சட்டமாகக் கொண்டு வருவதற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளது. இப்போராட்டங்களில் நூற்றுக்கணக்கான தோழர்கள் உயிர்த் தியாகம் புரிந்துள்ளனர்.

விவசாயிகள் சங்கத் தலைவர்களின் உயிருக்கு விலை, வீடுகளுக்குத் தீ வைப்பது, சொத்துக்களை அழிப்பது, கைது செய்து சிறையில் அடைப்பது, நிலப்பிரபுத்துவ குண்டர் படைகளால் எத்தனையோ தாக்குதல்கள் போன்ற பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இடைவிடாத விவசாயிகள் சங்கப் போராட்டங்களின் விளைவாகத்தான் மாநில அரசு பின்வரும் சட்டங்களைக் கொண்டு வந்தது:

l 1952-ல் பண்ணையாள் பாதுகாப்பு சட்டம்

l 1955-ல் சாகுபடித்தாரர் பாதுகாப்பு சட்டம்

l 60 - 40 வாரச்சட்டம்

l 1961-ல் நில சீர்திருத்த சட்டம்

l 1963-ல் இனாம் ஒழிப்பு சட்டம்

l 1969-ல் குத்தகைதாரர் பதிவு சட்டம்

விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு

ஒன்றிய பாஜக அரசு கடந்த 12 ஆண்டுகளில் விவசாயிகள் வாழ்விலும், இதர கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்விலும் பெரும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. குறிப்பாக, விதை மசோதா 2025, மின்சாரத் திருத்த மசோதா 2025,வெளிநாடுகளுடனான தாராள வேளாண் வணிக ஒப்பந்தம், இந்திய விவசாயத்தில் கார்ப்பரேட் லாபம்கொழிப்பதற்கும், விவசாயத்தைக் கபளீகரம் செய்வதற்கும் சட்டங்களைக் கொண்டுவர முயற்சித்துவருகிறது. ஒன்றிய ஆட்சியாளர்களின் வேளாண் விரோத பொருளாதாரக் கொள்கைகளை முறியடித்திடவீரஞ்செறிந்த போராட்டங்களை விவசாயிகள் ஒன்றிணைந்து தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட்டுகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் தேவையான அனைத்தையும் சட்டப்பூர்வமாக மாற்றிடவும்; விவசாயிகளுக்கு விரோதமான அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து குரல்கொடுத்து விவசாயிகள் போராடினால் கொடூரமான அடக்குமுறைச் சட்டங்களை ஏவி பொய் வழக்கு, சிறை, சித்ரவதை என அச்சுறுத்தியும் வருகிறது. இந்திய அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறித்து எதேச்சதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. மத, சாதிய உணர்வுகளைப் பயன்படுத்தி விவசாயிகளிடையே பிரிவினையை உருவாக்குவது, மக்களைப் பிளவுபடுத்தி மோதவிடுவது என மக்களின் ஒற்றுமைக்குத் தீங்கு ஏற்படுத்துகிற அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது.

2014-ல் ஒன்றிய ஆட்சிப்பொறுப்பிற்குப் பாஜக வந்ததிலிருந்து அதிகரித்து வரும் வேளாண் நெருக்கடிகளால் இதுவரை 1,47,000 விவசாயிகளும் 3,50,000 விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற உழைப்பாளி மக்களாக உள்ளதினக்கூலிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2014-ல்ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில்ஒரு விவசாயி கூடத் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுப்போம், ஒரே ஆண்டில்விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவோம்” என உறுதியளித்தார். ஆனால் அவர் விவசாயிகளுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுநாள் வரை நிறைவேற்றவில்லை.

இந்த மக்கள் விரோத, விவசாயிகள் விரோத ஒன்றியபாஜக ஆட்சியை அகற்றுவதற்கான போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களையும் இணைத்து அகிலஇந்திய அளவில் தொடர் கூட்டுப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். மேலும் ஒன்றிய பாஜகஅரசின் தவறான பொருளாதார, தொழிலாளர் விரோதகொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டி வலுமிக்க போராட்டங்களை நடத்தி வருகிறோம். குறிப்பாக ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான போராட்டத்தில் இந்த ஒற்றுமையைப் பறைசாற்றியுள்ளோம். இதன் விளைவாக மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்த சாதனையை இந்தியவேளாண் சமூகம் நிகழ்த்திக் காட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் ஒன்றிய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். தமிழ்நாட்டினுடைய ஜீவாதாரமாகஅமைந்துள்ள நதிநீர் பிரச்சனைகளில் சரியான தலையீடுகளைச் செய்து தமிழ்நாட்டின் பாசன உரிமையைநிலைநாட்டுவதற்கான போராட்டக் களத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முதன்மையான அமைப்பாகச் செயல்பட்டுள்ளது. மேலும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை,கொள்முதல், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிற்கு நிவாரணம், பயிர் காப்பீடுஆகியவற்றிற்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

எதிர்காலத்தில் ஒன்றிய - மாநில அரசுகளின் கார்ப்பரேட் ஆதரவு விவசாய விரோத கொள்கைகளை முறியடிக்கும்விதமாக, “விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப்போம்” என்ற முழக்கத்தோடு 2026 செப்டம்பர் 27 அன்று பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் பேரணி - பொதுக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்போம். எதிர்கால போராட்டக் களத்தைஅமைக்க தூத்துக்குடியில் ஒன்று கூடுவோம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.