முந்தய பக்கம்

விவசாயிகள் சங்க குடவாசல் நகர 25 ஆவது மாநாடு

9 Aug 2026, 11:58 pm
விவசாயிகள் சங்க குடவாசல் நகர 25 ஆவது மாநாடு

விவசாயிகள் சங்க குடவாசல் நகர 25 ஆவது மாநாடு

திருவாரூர், ஆக. 9- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், குடவாசல் நகர 25 ஆவது மாநாடு நகர தியாகி தங்கையன் நினைவகம் ஜி.வி. அரங்கத்தில் நடைபெற்றது.

மாநாட்டு கொடியை நகரத் தலைவர் எம். மகாலிங்கம் ஏற்றி மாநாட்டுக்கு தலைமை ஏற்றார். அமைப்பின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி துவக்க உரையாற்றினார். நகரச் செயலாளர் டி.ஏ. சரவணன் வேலை அறிக்கை வாசித்தார். சிபிஎம் நகரச் செயலாளர் டி.ஜி. சேகர், தெற்கு ஒன்றியச் செயலாளர் டி. லெனின், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். லெட்சுமி மற்றும் வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநாட்டில் 9 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டு தலைவராக எஸ். திருமுருகன், செயலாளராக டி.ஏ. சரவணன், பொருளாளராக பாலகுமார் மற்றும் துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் எம்.சேகர் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார்.

எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன்களைமுழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram