கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்த முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
19 Jan 2026, 2:23 pm
<p><strong>கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்த முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்</strong></p>
<p>சென்னை, ஜன.19 - கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கூலி உயர்வு கோரி போராடி வருகின்ற னர். தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் ஜன.20 அன்று மாநிலம் முழுவதும் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலப் பொதுச் செய லாளர் சாமி.நடராஜன் விடுத் துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: விவசாயிகள் நிறுவ னங்களிடம் இருந்து குஞ்சு களை இறக்கி, கோழியை வளர்த்துக் கொடுக்கிறார் கள். ஆனால் விவசாயி களுக்கு உரிய கூலியை நிறு வனங்கள் தருவதில்லை. ஒரு கிலோ கோழி வளர்ப்புக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.6.50 மட்டுமே தரப்படு கிறது. பல ஆண்டுகளாக வளர்ப்பு கூலி உயர்த்தப்பட வில்லை. ஆனால் நிறுவ னங்கள் நல்ல லாபம் ஈட்டு கிறார்கள். சொந்த நிலத்தில் பண்ணை அமைத்து இரவு-பகலாக குடும்பமே உழைத்து கோழி களை பராமரித்து வளர்த்துக் கொடுக்கும் விவசாயிகள் கூலி உயர்வு கேட்டால் விவ சாயிகளுக்கு கோழி குஞ்சு களை இறக்க மறுத்து நிறு வனங்கள் விவசாயிகளை மிரட்டுகின்றன. நிறுவனங்களுக்கு ஆதர வாக இருப்பவர்களை பயன் படுத்தி விவசாயிகளின் ஒற்று மையை சீர்குலைக்கிறார் கள். நிறுவனங்களின் விவசாயிகள் விரோத நடவ டிக்கைகளை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வன்மை யாகக் கண்டிக்கிறது. கறிக்கோழி பண்ணை விவசாயிகள் நிறுவனங்களு டன் ஒப்பந்த அடிப்படை யில் கோழி வளர்த்து கொடுக் கிறார்கள். இதில் மாநில அரசு தலையிட முடியாது என்று அதிகாரிகள் சொல் வதை ஏற்க முடியாது. ஏற்கனவே, தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவ சாயிகள் சங்கம் கூலி உயர்வு கேட்டு போராட் டத்தை தமிழ்நாட்டில் நடத்தி யுள்ளது. அப்போது அமைச்சர் தலை மையில் முத்தரப்பு கூட்டம் நடத்தி உடன்பாடு எட்டப் பட்டது. அதன் அடிப்படை யில் ரூ.3.50 ஆக இருந்த வளர்ப்புக்கூலி விவசாயி களுக்கு உயர்த்தப்பட்டது. இன்று கூலி உயர்வு கோரி விவசாயிகள் போராடி வருகிற நிலையில், போரா டுகிற விவசாயிகளின் நியாய மான கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கும், கோழிக் கறி நுகர்வோரின் நலன் களை கருதியும், போராடு கிற விவசாய பிரதிநிதி களை அழைத்து தமிழ்நாடு அரசு முத்தரப்பு கூட்டத்தை நடத்தி கோழி வளர்ப்பு கூலியை உயர்த்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.</p>
<p> </p>
