தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆந்திராவிலிருந்து கொண்டு வரும் நெல், கரும்பை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

15 Nov 2025, 4:09 pm
ஆந்திராவிலிருந்து கொண்டு வரும் நெல், கரும்பை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
<p><strong>ஆந்திராவிலிருந்து கொண்டு வரும் நெல், கரும்பை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்</strong></p> <p>திருவள்ளூர், நவ.15- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் வெள்ளியன்று (நவ.14) நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் அதிக அளவில் பங்கேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். &nbsp;ஆந்திராவிலிருந்து ஏஜெண்டுகள் மூலம் அதிக அளவில் கரும்பு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்படுவதால் திருத்தணி பகுதி கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலைக்கு கரும்பு அனுப்ப முன்பதிவு செய்த விவசாயிகள் கரும்பு வெட்டி சாலையில் தேங்க வைத்த பின்னும் 4 நாட்கள் கடந்தும் ஆலை நிர்வாகம் வாகனங்கள் அனுப்பாததால் கரும்பு காய்ந்து எடை குறைந்து விவசாயிகள் பாதிப்படைந்து வரு கின்றனர். &nbsp;இதையடுத்து மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மூலம் ஆந்திர கரும்பு வருவது தடுக்கப்படும் என்றும், இனி கரும்பு வெட்டும் வயலில் ஜிபிஆர்எஸ் போட்டோ எடுத்து அனுப்பும் கரும்பு மட்டுமே ஆலைக்கு அனு மதிக்கப்படும் என்றும் கோட்டாட்சியர் உறுதியளித்தார். &nbsp;திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக். 31 அன்று நடை பெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் மூலம் ஆந்திராவிலிருந்து நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், குடிமனை பட்டா கோரி செப்.30 அன்று கொடுத்த 1200-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஒரு மாதம் ஆகியும் விசாரணைக்கு வராததால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். &nbsp;இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஜி.சம்பத், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் சி.பெருமாள், மாவட்ட செயலாளர் எஸ்.ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.