வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு: உடனடியாக மீட்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
22 Dec 2025, 4:02 am
<p>உடுமலை, டிச.22- மேற்கு தொடர்ச்சி மலை மலை அடிவாரங்களில் வசதி படைத்த நபர்கள் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, சுற்றுலாப்பயணிகள் தங்கும் விடுதிகள் கட்டியுள் ளனர். அதை உடனடியாக அகற்ற வேண்டும் என திங்க ளன்று மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். உதவி வன அலுவலர் சரவணன் தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் உடுமலை தாலுகா தலைவர் பாலதண்டபாணி பேசுகை யில், வனத்துறைக்கு சொந்தமான மலை ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விவ சாய நிலங்கள் மற்றும் விடுதிகளை மீட்க வேண்டும். காட்டுப்பன்றிகளால் ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்து பல மனு அளித்துள்ளோம். கூண்டு வைத்து காட்டுப்பன்றியை பிடிப்பது நடைமுறை சாத்தியமில்லை என்பதால் தொடர்ந்து சேதாரம் நடைபெற்று வருகிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு காணவில்லை என்றால், விவசாயிகளுக்கு பெரும் பொரு ளாதார இழப்பு ஏற்படும். தற்போது குடிமங்க லம் ஒன்றியம் தாண்டி பன்றிகள் பரவியுள் ளது. மேலும் பசுமை பகுதிகளை அழித்து வருவதால், வன விலங்குகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு ஊடுருவி வருகின்றன. இதை தடுக்க வனத்திற்குட் பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, இனி ஆக்கிரமிப்பு நடக்காத வகை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் மருள்பட்டி பகுதியில் இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பயன்படுத்தாமல் புதர் மண்டி இருப்பதால் காட்டுப்பன்றி, மயில் கள் கூடாரமாக மாறியுள்ளன. இதை தடுக்க குடியிருப்பு பகுதியை சுத்தம் செய்து முள் வேலி அமைக்க வேண்டும். வன விலங்குக ளால் பாதிக்கும் விவசாயிகள் நிவாரணம் கேட்டு விண்ணப்பிக்கும் மனுக்களுக்கு உட னடியாக உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றார். உடுமலை தாலுகா செயலாளர் அருண்பி ரகாஷ் பேசுகையில், வன விலங்குகளால் அதிக பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், தற் போது புதிதாக குரங்குகள் தென்னை மரங் களை சேதப்படுத்தி வருகின்றன. காட்டுப் பன்றியை கட்டுப்படுத்த தமிழக அரசால் வழங்கப்பட்ட உத்தரவை நடைமுறை படுத் துவதில் அதிக சிரமம் உள்ளது. எனவே வனத்துறையினர் பன்றிகளை சுட வழிகாட் டுதல் வழங்க வேண்டும். மேலும் சங்கராம நல்லூர் தெற்கு ஆண்டிபட்டி செல்லும் சாலை யில், மான்கள் மா மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. அதனை கட்டுப்படுத்த வேண் டும். 250 மரங்களில் தற்போது 110 மரங்கள் மட்டுமே உள்ளன. மற்ற மரங்களை காப்பாற்ற முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளார்கள் என்றார்.</p>
