முந்தய பக்கம்

அமெரிக்கா - இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

10 Mar 2026, 3:51 pm
அமெரிக்கா - இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>அமெரிக்கா - இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 10- ஈரான் மீது போர் தொடுத் துள்ள அமெரிக்கா - இஸ் ரேலை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார் பில் செவ்வாயன்று ஊத்துக் குளி தாலுகா குழு சார்பில் &nbsp;ஊத்துக்குளி ஆர்.எஸ். பகு தியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊத்துக்குளியில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா துணைத் தலை வர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் &nbsp;எஸ்.கே.கொளந்தசாமி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் &nbsp;கு.சரஸ்வதி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். லாபவெறி, எண்ணெய் வளக் கொள்ளை, டாலர் சந்தை ஆதிக்கத்திற்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தி பல்லாயி ரக்கணக்கான மக்களை கொன்று குவித்த &nbsp;ஏகாதிபத்திய அமெரிக்கா - இஸ்ரேலை கண் டித்து முழக்கங்கள் எழுப்பினர். &nbsp;அதேபோல் தமிழக விவசாயிகள் சங்கம் &nbsp;சார்பில் குடிமங்கலம் ஒன்றியத்தில் இராமச் சந்திராபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் &nbsp;செயலாளர் எம்.விஜயகுமார் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு &nbsp;உறுப்பினர் கி.கனகராஜ் &nbsp;கண்டன உரையாற்றினார். இதில் திரளா னோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram