அமணம்பாக்கம் பட்டா கோரிக்கை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காத்திருக்கும் போராட்டம் கைவிடப்பட்டது
7 Mar 2026, 2:36 pm
<p><strong>அமணம்பாக்கம் பட்டா கோரிக்கை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காத்திருக்கும் போராட்டம் கைவிடப்பட்டது</strong></p>
<p>திருவள்ளூர், மார்ச் 7- அமணம்பாக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தாமரைப்பாக்கம் ஆர்.ஐ அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருவள்ளூர் வட்டாட்சி யர் பாலாஜி சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அடுத்த ஒரு வாரத்தில் 44 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்யவும், வெட்டுப் பள்ளம் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்ப வர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாட்சியர் தெரி வித்தார்.. திருவள்ளூர் வட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், வட்டச் செயலாளர் திருப்பதி, சிபிஎம் வட்டக் குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், புஷ்பா, கிராமத்தை சேர்ந்த சதிஷ், சிகாமணி, விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
