முந்தய பக்கம்

பச்சை முட்டை மையோனெய்ஸ்க்கு தடை நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு

25 Apr 2026, 1:01 pm
பச்சை முட்டை மையோனெய்ஸ்க்கு தடை நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு
<p>பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனெய்ஸுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. பச்சை முட்டை அடிப்படையில் தயாரிக்கப்படும் மையோனெய்ஸ், சுகாதார ரீதியாக ஆபத்தானதாக இருப்பதாக மருத்துவ மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.</p><p>குறிப்பாக, சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடும் அபாயம் இருப்பதால், கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், பொதுமக்களின் உடல்நல பாதுகாப்பை முன்னிறுத்தி, அந்தத் தடையை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram