முந்தய பக்கம்

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

1 Jul 2026, 10:52 am
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2026–27 கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 13ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார்.

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து கலந்தாய்வுக்கான முழு அட்டவணையையும் அறிவித்தார்.

அதன்படி, ஜூலை 13 முதல் ஜூலை 17 வரை மாற்றுத்திறனாளிகள் மற்றும் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர் இடஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொறியியல் சேர்க்கைக்குத் தகுதி பெற்ற மாணவர்கள், அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

Share
FacebookXWhatsAppTelegram