பொறியியல் படிப்பில் சேர 2.45 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
7 Jun 2026, 11:02 pm

பொறியியல் படிப்பில் சேர 2.45 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை, ஜூன் 7 - தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டில் பொறியி யல் படிப்பில் சேர்க்கை பெற 2,45,220 மாணவர் கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித் துள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதியும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாண வர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 13 ஆம் தேதியும் வெளியாயின.

இதனைத் தொடர்ந்து உயர் கல்வியில் சேர்க்கை பெற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வந்தனர். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதால் இப்படிப்புகளில் சேர்க்கை பெற மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற வளாக கல்லூரி கள், உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வழங்கப்படும் பிஇ, பிடெக், பி.ஆர்க் ஆகிய இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்-லைன் விண்ணப் பம் கடந்த மே 3 ஆம் தேதி தொடங்கியது.

ஜூன் 2 ஆம் தேதியுடன் விண்ணப்பம் பெறுவது நிறை வடைய இருந்த நிலையில் ஜூன் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது

. மொத்தம் 3,02,373 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 2,45,220 மாணவர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை நிறைவு செய்துள்ளனர்.

பதிவு செய்து கட்டணம் செலுத்தி யவர்களில் 2,42,909 பேர் பொதுப் பிரிவிற்கும், 2,311 பேர் தொழிற்கல்விப் பிரிவிற்கும் விண்ணப்பித் துள்ளனர்.

சிறப்புப் பிரிவினருக்கான பதிவில், விளை யாட்டுப் பிரிவில் 7,981 பேரும், மாற்றுத் திறனாளி கள் பிரிவில் 576 பேரும், முன்னாள் ராணுவத்தின ரின் வாரிசுகள் பிரிவில் 1,577 பேரும் பதிவு செய்துள்ள னர்.

பாலின வாரியாக 1,35,932 ஆண்களும், 1,09,278 பெண்களும், 10 மூன்றாம் பாலினத்தவர் களும் என மொத்தம் 2,45,220 பேர் விண்ணப்பித்து உள்ளனர். பள்ளிக் கல்வி வாரிய அடிப்படையில் பார்க் கும்போது, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிக் கல்வி வாரியத்தைச் சேர்ந்த 2,13,898 பேரும், சிபிஎஸ்இ வாரியத்தைச் சேர்ந்த 28,693 பேரும், ஐசிஎஸ்இ வாரியத்தைச் சேர்ந்த 1,187 பேரும், பிற வாரி யங்களைச் சேர்ந்த 1,442 பேரும் விண்ணப்பித் துள்ளனர்.

பிறப்பிடம் அடிப்படையில் 2,43,575 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாகவும், 1,645 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

தேசியம் வாரியாக 2,44,980 இந்தியர்களும், 103 இலங்கைத் தமிழர்களும், 137 ஓசிஐ பிரிவினரும் சேர்க்கை பெற பதிவு செய்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 50,373 பேர் பதிவு செய்து உள்ளனர். இதில் 49,774 பேர் பொதுப் பிரிவிற்கும் 599 பேர் தொழிற்கல்விப் பிரிவிற்கும் விண்ணப்பித் துள்ளனர்.

இவர்களில் 24,742 ஆண்களும், 25,628 பெண்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற விண் ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 29 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

பொதுப் பிரிவு மற்றும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற அடிப்ப டையில் தனித்தனியாக தரவரிசை வெளியிடப் படும். அதனைத் தொடர்ந்து அதே நாளில் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும். முதலில் சிறப்புப் பிரி வினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு பின்னர் பொது கலந்தாய்வு நடைபெறும்.