தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

6 May 2026, 10:59 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் கையெழுத்திடுங்கள்

ஒன்றிய அரசு மீண்டும் நிர்ப்பந்தம் சென்னை: தேசிய கல்விக்கொள்கை 2020-இன் கீழ் நாடு முழுவதும் 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தும் ‘பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா’ திட்டத்தில் இணைய தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளை ஒன்றிய கல்வி அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்த நிலையில், திமுக அரசு இதனைக் கடுமையாக எதிர்த்தது. மும்மொழிப் பாடத்திட்டம் உள்ளிட்ட மாநில உரிமை களுக்கு எதிரான அம்சங்கள் இதில் உள்ளதாக குற்றம் சாட்டி யது. இப்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடு மாறு, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய அரசு மீண்டும் கடிதம் எழுதி யுள்ளது. தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசும், மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான அரசும் அமைய உள்ள நிலையில், முந்தைய அரசுகள் எதிர்த்த இந்தத் திட்டத்தை புதிய அரசுகளும் எதிர்க்குமா, அல்லது ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மு.க.ஸ்டாலினைச் சந்தித்த ரஜினிகாந்த்

சென்னை: கொளத்தூர் தொகுதியில், தொடர்ச்சியாக வெற்றிபெற்று வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்தத் தேர்தலில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவுக்கு எதிராக தோல்வியடைந்தார். இது திமுக கட்சியினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்த் ஆழ் வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். வெற்றிபெற்ற நேரத்தை மட்டுமல்ல, இக்கட்டான நேரத்திலும் உடனிருப்பதாக ரஜினிகாந்த் தெரி வித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக ஆதரவு விஜய்க்கு இல்லை கே.பி.முனுசாமி பேட்டி சென்னை: தவெகவுக்கு அதிமுக ஆதரவு தரவேண்டும் என்று சி.வி. சண்முகம் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், சி.வி. சண்முகம், கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தொடர்ந்து சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க லாமா என்பது குறித்து எம்.எல்.ஏ-க்களிடம் கருத்துகள் கேட்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் “தவெகவுக்கு அதிமுக ஆதரவு என்ற செய்தி முற்றிலும் தவறானது; நாங்கள் எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை” என்று கே.பி. முனுசாமி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடன் தெரிவித்துள்ளார்.

தவெக-வுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்! ஐ.யு.எம்.எல். அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்று 2 தொகுதி களில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது. தவெக தங்களிடம் ஆதரவு கேட்கவில்லை, ஆதரவு தரப்போவதும் இல்லை என ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகைதீன் தனி யார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித் துள்ளார்.

திமுக முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சி!

சென்னை: தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பது, திமுகவிற்கு முதுகில் குத்தும் செயல் என்று திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார். காங்கி ரஸ் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாக இருக்காது என்றும், தேசிய அளவில் காங்கிரஸ் மீது நம்பிக்கையற்ற தன்மை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சி!

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து, 169 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. இதில், 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 3 ஆம் இடத்தில் தள்ளப்பட்டது. 122 தொகுதி களில் தோல்வியடைந்த அதிமுக, பெரும்பாலான இடங்களில் 3 ஆம் இடத்திற்கே தள்ளப்பட்டது. இதில் 101 தொகுதிகளில் வைப்புத்தொகையை யும் இழந்துள்ளது. முன்னாள் அமைச்சர்களான- ராயபுரத்தில் போட்டியிட்ட டி. ஜெயக்குமார், ஆயிரம் விளக்கில் போட்டியிட்ட வளர்மதி, மாதவரத்தில் போட்டியிட்ட மூர்த்தி உள்ளிட்டோரும் வைப்புத்தொகை இழந்துள்ளனர்.

நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன

சென்னை: மார்ச் 15 முதல் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதி முறைகள் மே 6 மாலை யுடன் முடிவுக்கு வருவ தாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரி வித்துள்ளார்

மாமல்லபுரம் விடுதியில் தவெக எம்எல்ஏ-க்கள்!

சென்னை: தவெக சார்பில் வெற்றிபெற்ற 108 சட்டமன்ற உறுப்பி னர்கள் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதி யில் உள்ள ஃபோர் பாயிண்ட் நட்சத்திர விடுதி யில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பனையூரில் உள்ள தவெக தலைமை அலு வலகத்தில் விஜய் தலை மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத் திற்குப் பிறகு அவர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆட்சி அமைக்கும் வரை எம்.எல்.ஏ-க்களை ஒரே இடத்தில் வைத்திருப் பதே விஜய்யின் திட்டம் என தெரியவந்துள்ளது. அனைவருக்கும் சகல வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. விடுதியில் பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடுகளும்

சட்டமன்றம் செல்லும் 22 பெண் எம்எல்ஏ-க்கள்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 22 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் விஜய்-யின் தவெக சார்பில் வெற்றிபெற்றவர் களில் 13 பேர் பெண்கள். தவெக-வில் வெற்றி பெற்றவர்களில் அதிக பட்சமாக கயல்விழி 1,33,611 வாக்குகளும், கவிதா சந்தோஷ் 1,46,466 வாக்குகளும், சத்யபாமா 1,31,401 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிட்டவர் களில் 6 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். பாமக-விலிருந்து சவு மியா அன்புமணி, தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி. லதா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.