தீக்கதிர் முக்கிய செய்திகள்
5 May 2026, 10:27 pm

விஜய்க்கு ஆதரவா? பிரேமலதா விஜயகாந்த் பதில்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க தேமுதிக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். அதில், “புதிதாக ஆட்சி அமைக்கப் போகிறவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். நிறைய சவால்கள் இருக்கின்றன; அவற்றை அவர் நிரூ பிக்க வேண்டும். நாங்கள் மதச்சார்பற்றக் கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். இருந்தாலும் விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை. கேப்டனுடன் ஆரம்பம் முதலே பழகிய வர். அவர் நல்லபடியாக ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்லது செய்யட்டும்” என்று அவர் கூறினார். தாம் முதன்முறையாக விருத்தாசலம் எம்எல்ஏ-வாக சட்ட மன்றம் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் புதன்கிழமை யன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு வரு மாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 3-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோ சனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் சி.வி. சண்முகம்

சென்னை: மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டி யிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், 82 ஆயிரத்து 353 வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றார். சி.வி. சண்முகம், தற்போது மாநிலங்களவை உறுப்பின ராக இருக்கும் நிலையில், மயிலம் சட்டமன்ற தொகுதியி லும் அவர் வெற்றி பெற்றிருப்பதால், இந்த 2 பதவிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் எழுந் துள்ளது. இதையடுத்து சி.வி. சண்முகம் தனது மாநிலங் களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரியில் 5 ஆவது முறையாக முதலமைச்சர் ஆகிறார் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் (ஏப்ரல் 9) என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி 30 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 12, பா.ஜனதா 4, அதிமுக மற்றும் எல்ஜேகே தலா 1 என்று கூட்டணி வெற்றி பெற்றது. இதனை யடுத்து, ரங்கசாமி 5 ஆவது முறையாக புதுச்சேரி முதல மைச்சர் ஆசனத்தில் அமர உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த போது 2 முறையும், என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கிய பிறகு 3 ஆவது முறையாகவும் ஆட்சிக்கு வரு கிறார். வழக்கப்படி தனது ஆன்மிக குருவின் கோவிலில் வழிபட்ட பிறகு நல்ல நேரம் பார்த்து பதவி ஏற்க உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அறைகள் காலி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜி னாமா செய்ததையடுத்து, சென்னை தலைமைச் செயல கத்தில் திமுக அமைச்சர்களின் அறைகளை காலி செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடங்கின. கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் புகைப்படங்கள் அறைகளிலிருந்து அகற்றப்பட்டு வரு கின்றன. அத்துடன் அறைகளுக்கு புதிதாக வர்ணமும் பூசப்பட்டு வருகிறது. குறிப்பாக, இத்தேர்தலில் முதல மைச்சர் ஸ்டாலின் உட்பட 16 அமைச்சர்கள் தோல்வி யடைந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

தோல்வியை ஏற்கிறோம்! காங்கிரஸ் அறிக்கை

சென்னை, மே 5- தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்ப தாக தமிழ்நாடு காங்கி ரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கட்சியின் மூத்த தலைவர் செல்வ பெருந்தகை, “தேர்த லில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தின் தலைவர் விஜய் அவர்களுக்கு மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள வாழ்த்து களை முதலில் நினைவு கூர்கிறேன். அதன் தொடர்ச்சியாக விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரி விக்கிறேன். திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்திய ஒற்றுமை உணர்வும் தன்னலமற்ற அர்ப் பணிப்பும் அரசியல் பண்பாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். சமூக நீதி, சமத்து வம், மதச்சார்பற்ற தன்மை ஆகிய அடிப் படைப் பண்புகளை உறுதியாகக் காத்து மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயல்படு வோம். மக்களின் தீர்ப்பு எங்கள் வழிகாட்டி; மக்களின் நலன் எங்கள் உயர்ந்த கடமை” என்று தெரிவித்துள்ளார்.

மார்க்ஸ் சிலைக்கு கி.வீரமணி மரியாதை

சென்னை, மே 5- மாமேதை காரல் மார்க்ஸின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்பு ராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மே 17 இயக்க ஒருங்கி ணைப்பாளர் திருமுரு கன் காந்தி ஆகியோர் உள்ளனர்.

காங். எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை: தேர்தல் முடிவுக்குப் பின்னர் மற்ற கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்னும் சந்திக்கவில்லை. வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.