தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க வலியுறுத்தி அக். 13-15 தமிழகம் முழுவதும் போராட்டம்!
3 Oct 2026, 10:45 pm

தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க வலியுறுத்தி அக். 13-15 தமிழகம் முழுவதும் போராட்டம்!

சென்னை, செப். 3 -தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம்செய்யக் கோரி, அக்டோபர் 13 முதல் 15 வரை, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என்று ‘இந்தியா’ அணி அறிவித்துள்ளது.இந்தியா அணியின் ஆலோசனைக் கூட்டம், சனிக்கிழமை (அக்.3) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, மரிய வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமைப்புச் செயலாளர் எஸ்.குருநாதன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி, முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் ஏ.எம். முகமது அபுபக்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் என். குணசேகரன், சிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர். ரவீந்திரநாத், டி.எம்.மூர்த்தி, சிபிஐ(எம்எல்) லிபரேசன் மத்தியக்குழு உறுப்பினர் ஏ. சந்திரமோகன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் - அமைச்சர் பெ. விஸ்வநாதன், தாரகை கத்பட் எம்எல்ஏ, மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கே.எஸ். அழகிரி, சா. பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அக்.15 - சென்னையில் போராட்டம்!

இந்தக் கூட்டத்தில், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை பறித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இக்கோரிக்கையை முன்வைத்து, அக்டோபர் 13, 14 தேதிகளில் ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற முழக்கத்தோடுமாவட்டத் தலைநகரங்களிலும், அக்டோபர் 15 அன்று சென்னையில், இந்தியா அணித் தலைவர்கள் பங்கேற்கும் வகையிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இந்தப் போராட்டங்களில் ஒத்தக்கருத்துடைய அரசியல் கட்சிகள், அமைப்புகள் பங்கேற்க வேண்டுமென்றும் தீர்மானத்தில் அறைகூவல் விடுக்கப்பட்டது. முன்னதாக, ‘இந்தியா’ அணியில் இணைந்த தவெக-வை வரவேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.