தமுஎகச தலைவர் சி.எம்.குமார் தாயார் கிருஷ்ணவேணி காலமானார்
21 Dec 2025, 3:21 pm
<p><strong>தமுஎகச தலைவர் சி.எம்.குமார் தாயார் கிருஷ்ணவேணி காலமானார்</strong></p>
<p>சென்னை, டிச. 21 - தமுஎகச தென்சென்னை மாவட்டத் தலைவர் சி.எம்.குமாரின் தாயார் கிருஷ்ணவேணி அம்மாள் ஞாயிறன்று (டிச.21) காலமானார். அவருக்கு வயது 80. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், ச.லெனின், எஸ்.குமார், எம்.தாமு, ம.சித்ர கலா, டி.சுந்தர் சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெய வேல், ஈஞ்சம்பாக்கம் கிளைச் செயலாளர் கே.ஏ.ராஜசிம்மன், தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ., நிர்வாகிகள் மயிலைபாலு, மருதுபாரதி, பாரதி செல்வா, சரத்குமார், நிறைமதி, பாமிதா பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.இதனை தொடர்ந்து அவரது உடல் ஈஞ்சம்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.</p>
