முந்தய பக்கம்

கல்விமுறையை குழந்தைகளுக்கு ஏற்றதாக மாற்ற இருக்கிறோம்!

21 Jul 2026, 9:59 pm
கல்விமுறையை குழந்தைகளுக்கு ஏற்றதாக மாற்ற இருக்கிறோம்!
<p><strong>கல்விமுறையை குழந்தைகளுக்கு ஏற்றதாக மாற்ற இருக்கிறோம்!</strong></p><p>அமைச்சர் ராஜ்மோகன் தகவல் சென்னை, ஜூலை 21 - சென்னை கொரட்டூரில் பள்ளி பாடத்திட்ட மாற்றம் குறித்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் ராஜ்மோகன் செய்தியா ளர்களிடம் பேசினார். அப்போது, கடினமான கணிதம் இனி கதைகளின் வழியே எளிமையாக கற்பிக்கப் படும். அறிவியல், தொழில்நுட்பம், கலை என அனைத்தும் ஒருங்கிணைந்து புதிய கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும். குழந்தைகளை மையப்படுத்தியதாக கல்வி முறை மாற்றி அமைக்கப்படும். அனை வருக்குமான கல்வியாக இருக்கும். புத்தகச் சுமை புத்தகப்பையின் சுமை எந்த அளவிற்கு குறைகிறதோ, அந்த அளவிற்கு மாண வர்களின் மனச்சுமையும் குறையும் என்று கூறிய அமைச்சர், நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவான சுமையே எடுத்துச் சென்றிருப்பார் என்றும், அதைவிட அதிகமாக பள்ளி மாணவர்கள் சுமக்கின்ற னர் என்றும் குறிப்பிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram