மாணவர்களுக்கு கல்விக் கடன் தொகை அதிகரிப்பு?
18 Jul 2026, 9:40 pm
<p><strong>மாணவர்களுக்கு கல்விக் கடன் தொகை அதிகரிப்பு?</strong></p><p>சென்னை: மாணவர்களுக்கு கல்விக் கடனை தாராளமாக வழங்க முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் பம்பர் பரிசு அறிவிப்பு வெளியிடுவார் எனவும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். எத்திராஜ் மகளிர் கல்லூரி நிறுவனர் எத்திராஜின் 136 ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், கடந்த ஆண்டு 1.02 லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 1.50 லட்சம் பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடன் பெறுவதற்கான வருமான வரம்பு நிபந்தனையில் மாற்றம் கொண்டுவரவும், பிணையின்றி கடன் தொகையை உயர்த்தவும் அரசு பரிசீலித்து வருவதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி கல்வி அதிகாரி நியமிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.</p>
