இ-சேவை மைய பணியாளர்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்
6 Jun 2026, 8:06 pm

இ-சேவை மைய பணியாளர்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்

அமைச்சரிடம் தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் (சிஐடியு) மனு

சென்னை, ஜூன் 6- தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பணிபுரியும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஐந்து முறை வருகைப் பதிவு தளர்த்தப்பட வேண்டும். பெண் ஊழியர் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸை சந்தித்து, தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பாக மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், “தமிழ்நாடு மக்களின் நலன்கள் மற்றும் அத்தியாவசிய தரவுகள், ஆதார் அட்டைகள் மற்றும் சான்றிதழ்களின் தேவைகளை நிறைவேற்ற இ-சேவை மையங்கள் தமிழ்நாடு அரசால் 2015-இல் உருவாக்கப்பட்டது. இம்மையங்களில் தரவு உள்ளீட்டாளர்களுக்கான பதவிக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை கல்வித் தகுதியாக நிர்ண யிக்கப்பட்டது. இப்பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்கள் மாநிலம் முழுவதும் 800-க்கும் மேற்பட்டோர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

குறைந்தபட்ச ஊதியம் அமலாக்கம்

பணி நியமனம் செய்யப்பட்ட தரவு உள்ளீட்டாளர்களுக்கு 2015 அக்டோபர் முதல் ஆறு மாதங்களுக்கு மாத ஊதிய மாக ரூ.7198 என்றும், அதன் பின்னர் ரூ.7675 என வழங்கப் பட்டது. தற்போது 2026-இல் ரூ.7663 என வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இவர்களது பணி நியமன ஆணையில் ரூ.9,500 ரூபாய் வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.

அதே நேரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலின்படி ரூ.10,417 சம்பளம் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள். இது எந்த வகையில் நியாயமானது என புரியவில்லை. ஒரு அரசு நிறுவனம் இப்படிப்பட்ட தவ றான தகவல்கள் தருவது ஏமாற்றும் விதமாக உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர்.

சட்டப்படி பணி நிரந்தரம்

இ-சேவை மையங்களில் பணி என்பது நிரந்தரமான பணியாகும். ஆகவே தமிழ்நாடு தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிநிரந்தரச் சட்டம் பிரிவு 3-இன்படி 480 நாட்கள் பூர்த்தி செய்தால் நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் இந்த ஊழியர்களை அரசு கேபிள் டிவி நிர்வாகம் நிரந்தரம் செய்ய மறுத்து வருகிறது.

பெண் ஊழியர்கள் பாதுகாப்பு

இ-சேவை மையங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கான கழிவறை மற்றும் ஓய்வறை, மாதவிடாய் விடுப்பு என எந்த பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்து வருகிறார்கள்.

கோரிக்கைகள்

Y பல ஆண்டுகளாக பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

Y காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

Y குறைந்தபட்ச ஊதியம் மாதம் 26,000 ரூபாய் வழங்க வேண்டும்.

Y ஒப்பந்ததாரரின் ஒப்பந்த விதிகள் வெளிப்படையாக இருத்தல் வேண்டும்.

Y பெண்களுக்கு மகப்பேறு மற்றும் மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும்.

Y பொது மக்களுக்கு துரிதமாக சேவை செய்திட மையங்க ளுக்கு முறையாக பேப்பர், டோனர், கணினிகள், பிரிண்டர்கள் வழங்க வேண்டும்.

Y கடந்த பல ஆண்டுகளாக வழங்காத பொங்கல்/தீபாவளி போனசை உடனடியாக வழங்க வேண்டும். Y ஊழியர்களுக்கான சம்பள ரசீது (Payslip) முறையாக வழங்க வேண்டும்.

Y சமூக நல பாதுகாப்பான பிஎப், இஎஸ்ஐ போன்ற திட்டங்க ளில் பிடித்தம் செய்த பணம் முறையாக செலுத்தப்படு வதில்லை.

Y ஐந்து முறை வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும்.

Y ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும்.

Y இஎஸ்ஐ அடையாள அட்டை வழங்க வேண்டும். Y ஊதியம் பிடித்தம் செய்வதில் உள்ள குளறுபடிகளை தவிர்க்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகள் மீது தீர்வு காண உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு தரவு உள்ளீட்டா ளர்கள் சங்க (சிஐடியு) த்தின் சார்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெ. முகமது பர்வேஸை சந்தித்து, சங்க தலைவர் கே.சி.கோபிகுமார், துணைத் தலைவர் ஆர்.சுகுமாரன், சபரிஷ் ஆகியோர் மனு அளித்தனர்.