போதையின் பாதையை முற்றாக தடுத்திடுக!
12 Aug 2026, 9:00 pm

போதையின் பாதையை முற்றாக தடுத்திடுக!

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்றதலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதியேற்பு நிகழ்வு மாநில அளவில் நடந்துள்ளது. போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய் விருது வழங்கி பாராட்டியுள்ளார்.தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் முற்றாக தடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்த அமுதன் என்ற மாணவர்சக மாணவர்களால் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. அந்தக் கல்லூரி மற்றும் விடுதியில் இருந்த போதைப் பொருள்நடமாட்டம் குறித்து காவல்துறை விசாரணையின் போது அமுதன் தகவல் தெரிவித்ததாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு உண்மைக் குற்றவாளிகள்யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம்தொடர்ந்து இருந்து வருகிறது என்பதற்கு பல்வேறு குற்றச் செயல்கள் சாட்சியமாக அமைந்துள்ளன. இந்நிலையில்கோவை மாணவர் அமுதன் கொலை குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளனர். இதை விவாதத்திற்கு ஏற்பதாக சட்டப் பேரவைத் தலைவர் அறிவித்துள்ளதோடு திங்களன்று இதுகுறித்துவிவாதிக்கலாம் என்று பேரவையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசியதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்,கோவை மாணவர் அமுதன் கொலைக்கு மாணவர்களிடையே நிலவி வந்த கோஷ்டி மோதல்தான் காரணம் என்றுகூறியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது விசாரணையை பாதிக்கும் என்பது மட்டுமல்ல, விசாரணை எந்த திசையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்கான குறிப்பாகவும் அமைந்து விடக்கூடும்.

பேரவை இதுகுறித்து முழுமையாக விவாதிப்பதற்கு முன்பே, காவல்துறை விசாரணை முடிவடைவதற்கு முன்பே இத்தகைய கூற்றுகள் தவிர்க்கப்படவேண்டும். சாத்தான் குளம் லாக்கப் படுகொலையின் போது அப்போதைய ஆட்சியாளர்கள் மாரடைப்புக் காரணமாக தந்தை, மகன் இறந்ததாக கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் ஒரு பெரும் கேடாக மாறி வருகிறது. டாஸ்மாக் மூலம்வரும் வருமானத்திற்கு இலக்கு வைப்பது நிறுத்தப்பட வேண்டும். சட்ட விரோத போதைப் பொருள்நடமாட்டத்தை முற்றாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்று மறுப்பதால் மட்டும் எந்த ஒன்றும் இல்லாமல்போய்விடாது.