தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
4 hours before

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் உள்ளிட்ட திருத்தங்களை செய்ய டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்திற்கு பின் வெளியிடப்பட்ட சென்னை மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பாட்டியலில் சுமார் 84,000 பேர் சேர்ப்பு. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 29,14,908 ஆக உயர்ந்துள்ளது.

ஆண் வாக்காளர்கள் 14,04,968 பேரும், பெண் வாக்காளர்கள் 15,09,040 பேரும், மாற்று பாலினத்தவர் 900 பேரும், 18-19 வயது வரை உள்ள வாக்காளர்கள் 46,200 பேரும் உள்ளனர்.

மதுரை ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டார்.

அதன்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 25,13,711 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்கள் 12,29,742 பேரும், பெண் வாக்காளர்கள் 12,83,703 பேரும், மாற்று பாலினத்தவர்கள் 266 பேரும் உள்ளனர். மேலூர் தொகுதியில் 2,31,696 வாக்காளர்களும், மதுரை கிழக்கில் 3,39,394 வாக்காளர்களும், சோழவந்தான் (தனி) தொகுதியில் 2,16,355 வாக்காளர்களும், மதுரை வடக்கில் 2,22,397 வாக்காளர்களும், மதுரை தெற்கில் 1,80,718 வாக்காளர்களும் உள்ளனர்.

மதுரை மத்தியம் தொகுதியில் 2,00,488 வாக்காளர்களும், மதுரை மேற்கில் 2,77,649 வாக்காளர்களும், திருப்பரங்குன்றத்தில் 3,14,209 வாக்காளர்களும், திருமங்கலத்தில் 2,62,785 வாக்காளர்களும், உசிலம்பட்டியில் 2,68,020 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கோவை ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் மொத்தம் 27,68,820 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 13,33,590 பேரும், பெண் வாக்காளர்கள் 14,34,688 பேரும், மாற்று பாலினத்தவர்கள் 542 பேரும் உள்ளனர். தொகுதி வாரியாகப் பார்க்கும்போது, கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிகபட்சமாக 4 லட்சத்து 27 ஆயிரத்து 42 வாக்காளர்களும், கோவை தெற்குத் தொகுதியில் குறைந்தபட்சமாக 1 லட்சத்து 90 ஆயிரத்து 124 வாக்காளர்களும் உள்ளனர்.

மேலும், சூலூர் தொகுதியில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 568 பேரும், கிணத்துக்கடவு தொகுதியில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 350 பேரும், கோவை வடக்குத் தொகுதியில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 347 பேரும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 20 பேரும், மேட்டுப்பாளையம் தொகுதியில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 581 பேரும் வாக்காளர்களாக உள்ளனர்.

சிங்காநல்லூர் தொகுதியில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 117 பேரும், பொள்ளாச்சி தொகுதியில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 179 பேரும், வால்பாறை தொகுதியில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 492 பேரும் வாக்காளர்களாக உள்ளனர்.

சேலம் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார். இதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 27 லட்சத்து 95 ஆயிரத்து 315 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 13 லட்சத்து 88 ஆயிரத்து 234 பேர் ஆண்களும், 14 லட்சத்து 6 ஆயிரத்து 753 பேர் பெண்களும், 328 பேர் மாற்று பாலினத்தவர்களும் ஆவர்.