முந்தய பக்கம்

இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி - தமிழ்நாடு சாதனை!

28 Apr 2026, 12:42 pm
இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி - தமிழ்நாடு சாதனை!

தமிழ்நாடு 2025-26 நிதியாண்டில் 10.83% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஒன்றிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் 2021-22 முதல் 2025-26 வரை தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 9.07 சதவிகிதம் வளர்ச்சி விகிதத்தை எட்டியிருக்கிறது. முந்தைய ஐந்தாண்டு (2016-17 முதல் 2020-21 வரை) சராசரியான 5.21 சதவிகிதம் வளர்ச்சியைவிட 3.86 சதவிகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டில் 11.19% வளர்ச்சியைக் கண்ட நிலையில், தொடர்ச்சியாக 2ஆவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து 2025-26 நிதியாண்டில் 10.83% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024 - 2025 ஆம் நிதியாண்டில் ரூ.31.19 லட்சம் கோடியில் இருந்து 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.35.29 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. தனிநபர் வருமானம் ரூ.4.08 லட்சமாக உள்ளது.

வலுவான தொழில்துறை வளர்ச்சி மற்றும் குறிப்பிடத்தக்க வேளாண்மை மீட்சி ஆகியவற்றால், நாட்டின் மிக விரைவான பொருளாதார விரிவாக்கத்தை தமிழ்நாடு எட்டியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram