தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமைதியை விரும்புவதுதான் தமிழ்நாட்டின் டிஎன்ஏ; அதைச் சிதைக்கத் துடிப்பதுதான் என்டிஏ

6 Apr 2026, 4:15 pm
அமைதியை விரும்புவதுதான் தமிழ்நாட்டின் டிஎன்ஏ; அதைச் சிதைக்கத் துடிப்பதுதான் என்டிஏ

அமைதியை விரும்புவதுதான் தமிழ்நாட்டின் டிஎன்ஏ; அதைச் சிதைக்கத் துடிப்பதுதான் என்டிஏ மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரகடனம்!

மதுரை, ஏப். 6 - அமைதியை விரும்புவதுதான் தமிழ் நாட்டின் டி.என்.ஏ (DNA) என்றும், அதைச்  சிதைக்கத் துடிப்பதுதான் பா.ஜ.க தலைமை யிலான என்.டி.ஏ (NDA) என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

மதுரை திருமங்கலத்தில் ஏப்ரல் 5 ஞாயிறு மாலை நடைபெற்ற மாபெ ரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஒன்றிய அமைச்சர்க ளின் கேள்விகளுக்குப் பதிலடி கொடுத்த துடன், தமிழகத்தின் வரிப்பணத்தைச் சுரண்டும் ஒன்றிய அரசின் போக்கையும் அம்பலப் படுத்தினார். பியூஷ் கோயலுக்குப் பதிலடி: வரிப்பணம் எங்கே போகிறது? ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து எழுப்பிய விமர்ச னங்களுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலடி கொடுத்தார்.

“தமிழக அரசின் பணமெல்லாம் மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் என நேரடியாக மக்களுக்குத்தான் போகி றது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய அர சுக்குக் கட்டும் வரிப்பணம் எல்லாம் எங்கே போகிறது என்று பியூஷ் கோயல் பதில் சொல்ல முடியுமா? நாம் ஒரு ரூபாய் வரி கட்டி னால், நமக்குத் திரும்ப வருவது வெறும் 29 பைசா மட்டும்தான். ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு வாரி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் உழைப்பைச் சுரண்டி, மற்ற மாநி லங்களுக்கு மடைமாற்றும் இந்த அநீதியைத் தட்டிக்கேட்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார். குழந்தைகளின் கல்வியில் கைவைக்கும் பா.ஜ.க - அ.தி.மு.க துரோகம் இந்தித் திணிப்பிற்காகத் தமிழக மாணவர்க ளின் கல்வி நிதியை ஒன்றிய அரசு முடக்கி வைத்தி ருப்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “இந்தி யைத் திணிக்கும் நோக்கத்துடன் நம்முடைய குழந்தைகளின் கல்வி நிதியைக்கூட நிறுத்தி வைத்திருக்கிறது பா.ஜ.க அரசு.

இதற்குத் துணை போகும் அ.தி.மு.க-வும் ஒரு துரோகக் கூட்டணிதான். இந்தத் துரோகக் கூட்டணிக்குத் தமிழ்நாட்டு மக்கள் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தகுந்த பாடம் புகட்டுவார்கள். கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைச் சீர்குலைக்க நினைக்கும் இவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது” என்று உறுதிபடத் தெரிவித்தார். அ.தி.மு.க-வின் அடிமை அரசியல் அ.தி.மு.க-வின் செயல்பாடுகளை விமர் சித்த அவர், “பா.ஜ.க-வின் மிரட்டலுக்கு அஞ்சி  அ.தி.மு.க தனது கொள்கைகளை அடகு வைத்து விட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதே பா.ஜ.க-வின் ஒரே நோக்கம். இந்தியா முழு வதும் பா.ஜ.க புகுந்த மாநிலங்கள் என்ன கதியில் இருக்கிறது என்பதைப் பார்த்தாலே இவர்களின் ஆபத்து புரியும். மாநில சுயாட்சி யை நசுக்கி, ஒற்றை ஆட்சியைத் திணிக்கப் பார்க்கும் இவர்களை விரட்டியடிக்க வேண்டி யது காலத்தின் கட்டாயம்,” என்றார். மதுரை மாவட்டத் திட்டங்களும் வளர்ச்சிப் பணிகளும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகா ரத்தில் ஒன்றிய அரசு காட்டும் மெத்தனத்தைச் சாடிய முதலமைச்சர், “ஒரு செங்கல்லோடு தொ டங்கிய எய்ம்ஸ் கதை இன்னும் முடியாமல் இருப்பது மதுரையைச் சிறுமைப்படுத்தும் செயல்.

ஆனால், திமுக அரசு கலைஞர் நூற் றாண்டு நூலகம் போன்ற பிரம்மாண்ட திட்டங்க ளை மதுரையில் அமைத்துச் சாதனை படைத்துள்ளது. விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தவும், மதுரையின் உள் கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த வும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் முன்னு ரிமை அளிக்கப்படும்,” என்று உறுதியளித்தார். தமிழ்நாடு அணியா?  தில்லி அணியா? ஜனநாயகப் போர்! “இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாடு அணியா அல்லது தில்லி அணியா என்பதைத் தீர்மானிக்கும் ஜனநாயகப் போர். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்மு டைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தமிழ்நாடு அணியான இந்தியக் கூட்டணியை நீங்கள் ஆதரிக்க வேண்டும்,” என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை மாவட்ட வெற்றி வேட்பாளர்கள் மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்க ளை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு கேட்டார்: உதயசூரியன் சின்னத்தில், மதுரை கிழக்கு  தொகுதியில் பி. மூர்த்தி, மதுரை மத்தி தொகு தியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன், மதுரை வடக்கு தொகுதியில் கோ. தளபதி, திருமங்கலம் தொகுதியில் சேடப்பட்டி மணி மாறன், சோழவந்தான் தொகுதியில் ஆ. வெங்க டேசன், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநா தன், மதுரை மேற்கு தொகுதியில் ரகு பாலாஜி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதியில் கிருத்திகா தங்கபாண்டி ஆகியோரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கை சின்னத்தில், உசிலம்பட்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமார் மற்றும் மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் ஆகியோ ருக்குக் கை சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.