மாவட்டங்கள் வாரியாகப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
3 Jun 2026, 9:31 pm
<p><strong>மாவட்டங்கள் வாரியாகப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்</strong></p><p>சென்னை, ஜூன் 3- மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பேரிடர் கால நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும் அனைத்து வருவாய் மாவட் டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி நியமிக்கப் பட்டுள்ள அமைச்சர்களின் விபரம் வருமாறு: என். ஆனந்த் (விழுப்புரம், கட லூர்), ஆதவ் அர்ஜுனா (சென்னை, திருவண்ணா மலை), பி. வெங்கடரமணன் (மயிலாடுதுறை), ரா. குமார் (திருவள்ளூர்), நெ. மரிய வில்சன் (திருநெல்வேலி), ராஜ்மோகன் (பெரம்பலூர்), க.தென்னரசு (காஞ்சிபுரம்), ஆர்.வி. ரஞ்சித்குமார் (திருப் பத்தூர்), த. சரத்குமார் (செங்கல்பட்டு), வன்னி அரசு (கள்ளக்குறிச்சி), காந்திராஜ் (ராணிப் பேட்டை), ராஜ்குமார் (தரும புரி, அரியலூர்), ஏ.எம். ஷாஜ கான் (நாகப்பட்டினம்), வினோத் (தஞ்சாவூர்), ரமேஷ் (திருச்சி), சி. விஜயலஷ்மி (கரூர்), லோகேஷ் தமிழ் செல்வன் (நாமக்கல்), டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் (திருப்பூர்), செ. கமலி (நீல கிரி), ம. விஜய் பாலாஜி (வே லூர்), கே.ஏ. செங்கோட்டை யன் (ஈரோடு), வே. சம்பத் குமார் (கோவை), ஆர். நிர்மல்குமார் (மதுரை, தேனி), முகமது பர்வேஸ் (புதுக்கோட்டை), டாக்டர் டி.கே. பிரபு (சிவகங்கை), எஸ். கீர்த்தனா (கிருஷ்ண கிரி), கு. ஜெகதீஸ்வரி (விருதுநகர்), பெ. விஸ்வ நாதன் (திருவாரூர்), ஸ்ரீநாத் (தூத்துக்குடி), பெ. மதன் ராஜா (இராமநாதபுரம்), ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம்), செ. ராஜேஷ்குமார் (கன்னியாகுமரி), ராஜீவ் (தென்காசி), விக்னேஷ் (திண்டுக்கல்). பொறுப்பு அமைச்சர் கள் அனைவரும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளு டன் இணைந்து, அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதையும், வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தி யுள்ளது.</p>
