தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

22 May 2026, 9:48 pm
திருச்சி விரைவு செய்திகள்

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, மே 22- இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவிக்கையில், “அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம் ,சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை மற்றும் சமூகநலம் என பல்வேறு துறைகளில், சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து, ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகளான பத்மவிபூசன், பத்மபூசன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டு வருகின்றன. 2027 ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவின் போது பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில், மேற்படி துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து, தகுதியான நபர்களாக இருந்து விருதுபெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விவரங்களை கருத்துருவாக ஜுன் 5-க்குள் புதுக்கோட்டை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பித்திட வேண்டும்’’ என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஆட்சியர்

தஞ்சாவூர், மே 22 - வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதி சேர்த்தல் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.tnvelaivaaippu.gov.in) வாயிலாக எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. ​இந்நிலையில், சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இச்சேவைகளைக் கட்டண அடிப்படையில் செய்து தருவதாகப் போலி விளம்பரங்கள் உலா வருகின்றன. எனவே, பொதுமக்கள் மற்றும் வேலைவாய்ப்பு நாடுவோர் யாரும் இதுபோன்ற போலி விளம்பரங்களையோ அல்லது இடைத் தரகர்களையோ நம்பி தங்களது தனிப்பட்ட விவரங்களையோ, பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளார்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி, மே 22- வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.3.2026 அன்றைய தேதியில், ஐந்து வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பிளஸ் 2, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர். மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு. பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.4.2026 அன்றைய தேதியில், ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. அரசின் முதியோர் உதவித்தொகை (OAP) பெறுபவர்களாயின், அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகைபுரிந்து, விண்ணப்பப்படிவத்தை திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம். விண்ணப்பதாரர் அரசுதுறை / தனியார் துறையிலும் எவ்வித ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயதொழில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருத்தல் கூடாது. ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர் மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழிற்கல்வி, பட்டப்படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியில்லை என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்

மயிலாடுதுறை, மே 22- மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாளான வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டம் திருவாளப்புத்தூர், கடக்கம், சித்தமல்லி, குறிச்சி, கடுவங்குடி, பட்டவர்த்தி, இளந்தோப்பு, தலைஞாயிறு-1, தலைஞாயிறு-2, வரதம்பட்டு, வில்லியநல்லூர், மேலாநல்லூர் உள்ளிட்ட 22 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டாமாறுதல், நில அளவை, பட்டா, பெயர் மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட 165 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடி தீர்வு காண உத்தரவிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் மயிலாடுதுறை உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அ. பதிவேடு, அடங்கல், பட்டா படிவம், நன்செய் புன்செய் கழிவு கணக்கு, பயிராய்வு கணக்கு, மரப்பட்டா பதிவேடு, பட்டா மாறுதல் விவரங்கள் உள்பட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு, பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதை ஆய்வு செய்தார். இத்தீர்வாயத்தில், மயிலாடுதுறை வட்டாட்சியர் சுகுமாரன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பார்வை திறன் குறைபாடுடையோருக்கான பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, மே 22- புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே, விடுதியுடன் கூடிய பார்வை திறன் குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்ததிக்குறிப்பு:- இப்பள்ளியில், மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலமாக சிறப்பான கல்வி, தரமான உணவு, சீருடை, பிரெய்லி, அபாகஸ் போன்ற சிறப்பு கற்றல் உபகரணங்கள் பயிற்சி, இசைகருவி வாசிக்க பயிற்சி, ஆண்டுக்கு ஒருமுறை கல்விச்சுற்றுலா, சிறப்பு கல்வி உதவித் தொகை என அனைத்தும் இலவசமாக வழங்கி சிறந்த முறையில் உரிய பாதுகாப்புடன் மாணவர்களின் நலனுக்காக சிறப்பாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கல்வி பயின்றவர்கள் அரசு துறையில் கல்லூரி விரிவுரையா ளர்களாகவும், ஆசிரியர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இப்பள்ளியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்பை பயன்படுத்தி பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரை 1 முதல் 8 ஆம் வகுப்புவரை புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்த்து அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி சார்ந்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள, ப.வடிவேல், தலைமை ஆசிரியர், பார்வைத்திறன் குறையு டையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, சட்டமன்ற அலுவலகம் அருகில், புதிய பேருந்து நிலையம், புதுக்கோட்டை-622001 என்ற முகவரியிலும், 9499933248, 9840272383, 04322-226452 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

பயிர்க்கடனை உடனடியாக வழங்குக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, மே 22- அனைத்து வேளாண் கூட்டுறவு கடன் கங்கங்களிலும் விவசாயிகளுக்கான பயிர்க்கடனை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். அதில், “தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்களின் வரத்து வாரிகளை உடனடியாக தூர் வாரி, கிடைக்கின்ற மழைநீரை முறையாக சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பயிர் சாகுபடிகளை சிரமமின்றி மேற்கொள்ள அனைத்து வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர்க்கடன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கனவே, கடன் பெற்றவர்களுக்கு கடனை புதுப்பித்து புதிய கடன் வழங்க வேண்டும். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேவையான அளவு உரம் மற்றும் இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் மற்றும் இடுபொருட்கள் விற்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆட்சியரிடம் எஸ். பொன்னுச்சாமி எழுப்பினார். கோரிக்கைகள் குறித்து உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

திருவெறும்பூர் பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மே,22- திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் டாக்டர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம் மாநகர திமுக செயற்குழு கூட்டம் மாநகர அவை தலைவர் நூர்கான் தலைமையில், கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. திருச்சி கிழக்குோத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும். திருச்சி திருவெறும்பூரில் கட்டப்பட்டு வரும் திருவெறும்பூர் பேருந்து நிலையத்திற்கு “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்’’ கருணாநிதி பெயரைச் சூட்டி, பணியைத் துரிதப்படுத்தித் திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அறந்தாங்கி அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை

அறந்தாங்கி, மே 22- புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யயப்பட்டுள்ளது. மே 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கக் கால அவகாசம் உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விருப்பமுள்ள மாணவ, மாணவியர் இக்கல்லூரியில் செயல்பட்டுவரும் மாணவர் சேர்க்கை உதவி மையத்தை உடனடியாக அணுகி, விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குத் தேவையான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், ஆதார் அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ், இனச்சான்று, வருமானச்சான்று, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் கல்லூரி மாணவர் சேர்க்கை உதவி மையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை அறிவித்துள்ளார்.

மே 29- தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, மே 22- புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மே 29 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிமுதல் இம்முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை நாடும் இளைஞர்கள்; தங்களது சுயவிவரகுறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

துரித உணவகத்தில் ஏசி சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி

தஞ்சாவூர், மே 22– தஞ்சாவூர், மேரீஸ் கார்னர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில், தரைத்தளத்தில், கே.எப்.சி துரித உணவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு தயாரிக்கும் கூடத்தில் உள்ள ஏ.சியில் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏசி மெக்கானிக் நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த கணேசன் (43) என்பவர், ஏசிக்கான கேஸ் நிரம்பும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது, சிலிண்டரில் ஏற்பட்ட அழுத்தத்தினால், வெடித்து சிதறியது. இதில், ஏற்பட்ட அதிர்வில், கட்டடம் முழுவதும் உள்ள ஜன்னல், கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஏசி பாகங்களும் வெடித்து சிதறின. இவ்விபத்தில், ஏசி மெக்கானிக் கணேசன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அப்போது, ஏசி சீரமைப்பு பணியை கண்காணித்துக் கொண்டு இருந்த ரவிராஜ் (27), அருண்குமார் (26) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களான மானோஜிப்பட்டி, வனத்துர்கா நகரை சேர்ந்த கதிரேசன்(24), செங்கிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த பிரேம்(26), ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (22), ஆகியோரும் படுகாயமடைந்தனர். உடன் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் அன்று இரவே உணவக ஊழியர் ரவிராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, தஞ்சாவூர் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏசி மெக்கானிக் கணேசன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பலி

தஞ்சாவூா், மே 22- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் கோட்டையை சேர்ந்தவர் ப. மகேந்திரன்(40). இவர் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில், மகேந்திரன் தனது வெல்டிங் பட்டறைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக வியாழக்கி ழமை மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூ ருக்கு வந்தார். பின்னர் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் பொய்யுண்டார்கோட்டை நோக்கி புறப்பட்டார். தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை பகுதியில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி மகேந்திரன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த தாலுகா காவல்து றையினர், சம்பவ இடத்திற்கு சென்று மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.