நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சீரமைக்கப்படுமா? - ஆர். மனோகரன்
16 Jul 2026, 9:37 pm

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சீரமைக்கப்படுமா? - ஆர். மனோகரன்

விவசாயிகள் தாங்கள் விளை வித்த நெல்லை விற்க முடி யாமல், தனியார் வியாபாரி களின் லாபவெறிக்கு ஆளாகி வாழ்வாதாரத்தை இழந்த சூழலில், விளை பொருட்களுக்கு அரசு கொள்முதல் அவசியம் என்ற கோரிக்கை வலுத்தது. இதன் விளை வாக, 1972-இல் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கும் நோக்கில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன. கடந்த 54 ஆண்டுகளாகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் இவை செயல்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் தனியார்மயமாக்கல் முயற்சியை எதிர்த்து, விவசாயிகள் போராடியே இக்கொள்மு தல் நிலையங்களைக் காப்பாற்றி வந்தனர்.

விவசாயிகளின் நலன் புறக்கணிக்கப்படுகிறதா?

விவசாயிகள் தங்களுக்குக் கட்டுபடியான ஆதார விலையைக் கோரிப் போராடியதன் பல னாக, ஒன்றிய-மாநில அரசுகள் நெல்லுக்கு ஆதார விலையை அறிவித்து வருகின்றன. நடப்பு (2026-27) பருவத்தில் சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,461 ஆகவும், பொது ரகம் ரூ.2,441 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு, மின்னணு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (e-DPC) மூலம் கொள்முதல் நடைபெறுகிறது. இருப்பினும், எந்த நோக்கத்திற்காக இவை தொடங்கப்பட்டனவோ, அதற்கு முரணான சூழலே தற்போது நிலவுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் வாரக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. போதிய இடவசதி இல்லாததால், மழையிலும் வெயிலிலும் நெல் மூட்டைகள் நனைந்து, சேதமடைவது தொடர்கதையாக உள்ளது. நெல் விற்பதற்கான நடைமுறைகளில் காலம் தாழ்த்துதல், சாக்கு மூட்டைப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் விவசாயிகள் அலை க்கழிக்கப்படுகின்றனர். மேலும், கொள்முதல் நிலையங்களில் தேங்கும் மூட்டைகளை உடனுக்கு டன் அரசு சேமிப்புக் கிடங்கு களுக்குக் கொண்டு செல்ல லாரி வசதிகள் முறையாகச் செய்யப்படுவதில்லை. இந்த நெருக்கடியைப் பயன் படுத்தி, லாரிகளுக்கு ‘மாமுல்’ கொடுப்பதற்காக, விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை வசூலிக்கப்படும் அவல நிலை நிலவுகிறது.

அடிப்படை வசதிகளற்ற கொள்முதல் நிலையங்கள்

அரசு விதிமுறைகளின்படி, ஒரு கொள்முதல் மையம் 50 சென்ட் பரப்பளவு மற்றும் 250 மெட்ரிக் டன் சேமிப்பு வசதியுடன் இருக்க வேண்டும். ஆனால், களநிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 4,028 கொள்மு தல் நிலையங்களில், தஞ்சாவூர், திருவாரூர், மயி லாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் மட்டும் 1,476 நிலையங்கள் உள்ளன. இவற்றில் போதிய இடவசதியோ, நெல் உலர்த்தும் தளங்களோ இல்லை. பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணி யாற்றும் இடங்களிலும் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், ஓய்வறைகள் மற்றும் முதலு தவிப் பெட்டி கூட இல்லை. பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே நெல் மூட்டை சரிந்து விழுந்த விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த துயரம் நிகழ்ந்தது. இது, ஊழியர் களின் பாதுகாப்பற்ற சூழலை உணர்த்துகிறது.

ஊழியர்களின் அவலநிலை

கடந்த 2025-26 ஆம் ஆண்டில் சுமார் 56.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இத்துறையில் நிரந்தர ஊழியர்கள் 6,688 பேர் மட்டுமே உள்ளனர். தற்காலிக மற்றும் பருவ காலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பணிபுரியும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில், இத்தனை தொழிலாளர்கள் இன்றும் தினக்கூலிகளாகவே பணியாற்றுவது பெரும் வேதனையாக உள்ளது.

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முறைப்படுத்தவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் அரசு உடனடியாகப் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: • கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் பாதுகாப்பான சேமிப்புக் கிடங்கு, அலுவலகம், குடிநீர், கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகளு டன் மேம்படுத்த வேண்டும்.

• அனைத்துப் பருவகால மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்து, காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும்.

• கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்ல உரிய லாரி வசதிகளைச் செய்து தர வேண்டும். லாரிகளுக்காகவும், இதர காரணங்களுக்காகவும் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கும் முறைகேடுகளை முற்றிலும் தடுக்க வேண்டும்.

• இயற்கை பேரிடர்களால் ஏற்படும் நெல் சேதாரங்களுக்கு, ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வும், கொள்முதல் நிலையங்களை முறையாகச் செயல்படுத்தவும் புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.