விபி ஜி ராம் ஜி புதிய சட்டத்தை திரும்பப் பெறுக! ஜூலை 1 - தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்!
20 Jun 2026, 11:09 pm

விபி ஜி ராம் ஜி புதிய சட்டத்தை திரும்பப் பெறுக! ஜூலை 1 - தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்!

திற்பரப்பு (கன்னியாகுமரி), ஜூன் 20- 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்தும், மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டக் கோரியும் ஜூலை 1 ஆம் தேதியைக் கருப்பு தினமாக அனுசரித்துத் தமிழகம் முழுவ தும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப் படும் எனத் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறி வித்துள்ளது. சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் மாநிலத் தலைவர் தோ.வில்சன் தலைமை யில் நடைபெற்றது. ஊனமுற்றோர் உரி மைகளுக்கான தேசிய மேடையின் (NPRD) செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், மாநிலப் பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: ஜூலை 1 கருப்பு தினம்: 200 மையங்களில் மறியல் ஒன்றிய மோடி அரசு, கிராமப்புற உழைப்பாளர்கள் பயன்பெற்று வந்த “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்குப்” பதிலாக, வரும் ஜூலை 1 முதல் ‘விபிஜி ராம்ஜி’ என்ற புதிய சட்டத்தை அமல்படுத்தத் திட்ட மிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதா ரத்தைச் சிதைக்கும் இப்புதிய சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும், பழைய 100 நாள் வேலைத் திட்டத்தையே தொடர வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனை கண்டித்து ஜூலை 1 அன்று தமிழகம் முழுவதும் கருப்புக் கொடியேந்தி மறியல் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன. நிலுவை உதவித்தொகை மற்றும் கல்வி உரிமை தமிழக அரசால் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பி த்து மாதக்கணக்கில் காத்திருக்கும் பல ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உட னடியாக நிதியுதவி வழங்கிட வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 5 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கறாராக அமல்படுத்த வேண்டும். அரசு உத்தர வின்படி, அவர்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டண முழு விலக்கை அளிக்க மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். தடையற்ற சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தரிசனம் தமிழகத்தில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களிலும் மாற்றுத்திறனாளி கள் எளிதில் அணுகும் தடையற்றச் சூழலை உருவாக்க வேண்டும். துணையா ளர் ஒருவருடன் இலவசமாகப் பயணிக்க வும், வாகனங்களை இலவசமாக நிறுத்தவும் சுற்றுலாத்துறை ஆவன செய்ய வேண்டும். அதேபோல, ஆலயங்களுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் செயற்கை உறுப்புகளுடன் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி, எவ்விதக் கட்டணமுமின்றி சிறப்புத் தரிசனம் செய்திட அறநிலையத்துறை உரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.