தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே மாநில உரிமைகளை காத்திட முடியும்! - மதுக்கூர் இராமலிங்கம்

3 Nov 2026, 10:16 pm
ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே மாநில உரிமைகளை காத்திட முடியும்! - மதுக்கூர் இராமலிங்கம்

ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே மாநில உரிமைகளை காத்திட முடியும்! - மதுக்கூர் இராமலிங்கம்

தமிழ்ப் புத்தாண்டு என்றைக்கு என்ற சர்ச்சை நீண்ட காலமாக நீடிக்கிறது. இப்போது சித்திரை 1ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்படுகிறது. தமிழ் ஆண்டுகள் என்று கூறப்பட்டாலும், ஆண்டு களின் பெயர் அனைத்தும் சமஸ்கிரு தத்திலேயேஇருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு பிறப்புக்கு சொல்லப்படும் புராணக் கதையும் பொருத்தமாக இல்லை என்பது ஒரு சாராரின்வாதம். மாறாக, தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பது ஒரு தரப்பு வாதம்.அதிமுக ஆட்சிக் காலத்தில் சித்திரை1 தமிழ்ப் புத்தாண்டு என்றும், திமுக ஆட்சிக் காலத்தில் தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்றும் மாறி மாறிச் சொல்லப்பட்டுவந்துள்ளது. இதனி டையே பண்பாட்டுவியல் அறிஞர் தொ. பரமசிவம் ஒரு காலத்தில் தைப்பூசம் தான் தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது என்று கூறுகிறார். இந்தச் சர்ச்சை நடந்துகொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாடு நாள் எதுவென்ற சர்ச்சை யும் துவங்கியுள்ளது.

தமிழ்நாடு என்று கூறக் கூடாது, தமிழகம் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம் என்று ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி கூறியகருத்துக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.‘தண்டமிழ் வேலி தமிழ் நாடகமெல் லாம்’ என்று பரிபாடலில் வருவதையும், ‘இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய’ என்றுசிலப்பதிகாரத்தில் வருவதையும், ‘இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார்’ என்று கம்பராமாய ணத்தில் வருவதையும், ‘வடவேங்கடம்தென்குமரிஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்’ என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் பனம்பாரனார் பாடியுள்ளதையும் தமிழறிஞர்கள் சான்றாதாரங்களாக முன்வைத்தனர். இது எதுவும் புரியாத ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையின்பெயரை‘லோக் பவன்’ என்று மாற்றிவிட்டு, நடையைக் கட்டிவிட்டார்.

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப் பேற்றுள்ள தவெக அரசு, நவம்பர் 1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ ஆகக் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளது. இதையொட்டி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விழா கொண்டாடப் பட்டுள்ளது. ஆனால், சென்னை மாகாணம் என்று இருந்ததை, தமிழ்நாடு என்று பெயர்மாற்ற சட்டப் பேரவையில் பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, 1967 ஜூலை 18ஆம் தேதி தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப் பட்டது. அந்த நாளைத்தான் தமிழ்நாடு நாள் எனக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்துமுன்வைக்கப்படுகிறது.2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் என்று அறிவிக்கப்பட்டது. 2021 திமுக ஆட்சிக்காலத்தில் ஜூலை 18, அதாவது தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் ‘தமிழ்நாடு நாள்’ என்று அறி விக்கப்பட்டது.

மொழிவழி மாநிலம் மற்றும்தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட தைப் பொறுத்தவரை நவம்பர் 1, ஜூலை18 மற்றும் தமிழகச் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தீர்மானத் திற்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, தமிழ்நாடு என்ற பெயர்நடைமுறைக்கு வந்த ஜனவரி 14 ஆகிய 3 நாட்களுமே முக்கியமானவைதான்.

மொழிவழி மாநிலமும் காங்கிரசின் தயக்கமும்

விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மொழிவழி மாநிலம் என்பதும் முன்னுக்கு வந்தது. காங்கிரஸ்கட்சியும் அதை ஏற்றது. 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மொழிவாரியாகப் பிரித்து காங்கிரஸ் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே அந்தக் கட்சி ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்று பெயர்வைத்துக்கொண்டது. ஆனால், விடுதலைக்குப் பிறகு மொழிவழி மாநிலம் என்பதை ஏற்பதில் காங்கிரஸ் கட்சிக்கும் தயக்கம்இருந்தது.குறிப்பாக, ராஜாஜி மொழிவழி மாநிலம் என்பதை நிராகரித்து “தட்சி ணப் பிரதேசம்” என்று கிளப்பிவிட்டார். ராஜாஜி அரசு இந்தி மொழித் திணிப்பிலும் மூர்க்கம் காட்டியது. இதையடுத்து, தமிழ்நாட்டில் போராட்டம் வெடித்தது. மொழிவழி மாநிலம் என்பதைத் துவக்கம்முதலே எதிர்த்த கட்சி உண்டுஎன்றால், அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட ஜனசங்கமே ஆகும்.இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதைக் கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்கவில்லை. 1956ஆம் ஆண்டு ஜூலையில் ஆர்.எஸ்.எஸ். நிறைவேற்றிய தீர்மானத்தில், “பாரதத்தின் ஒற்றுமைமீது ஆர்.எஸ்.எஸ்.-க்கு கலப்பட மில்லாத பக்தியும் உறுதிப்பாடும் உள்ளது. இந்த ஒற்றுமையை பராமரிக்கும்ஒரே வழி ஒற்றை ஆட்சி முறையே ஆகும். நாட்டை சீர்குலைக்கும் கொள்கைகளைக் கைவிட்டு, ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்தியஅரசை ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்து கிறது” என்று கூறப்பட்டிருந்தது.

மொழிவழி மாநிலங்களை மறுத்து, ஜனபாதம் என்பதை ஜனசங்கம் முன்வைத்தது. அதிகாரங்கள் அனை

த்தும் குவிக்கப்பட்ட மத்திய அரசு, நிர்வாக வசதிக்காக மட்டுமே பிரிக்கப்பட்ட மாநில அரசு என்பதே அவர்களது கோட்பாடு. கோல்வால்கர் கூறினார்:“மொழிவாரியான அல்லது இதரவகை பெருமிதத்திற்கு வகை செய்வதெல்லாம் நமது ஒன்றுபட்ட தன்மைக்கு கேடு விளைவிக்கும். இத்தகைய அடையாளமே இல்லாத ‘ஒரு நாடு, ஒரு அரசு, ஒருநாடாளுமன்றம், ஒரு நிர்வாகம்’ என்பதை பிரகடனப்படுத்த வேண்டும்.” (சிந்தனைக் கொத்து).இதைப் பின்பற்றித்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என ஒற்றையை கற்றையாகத் திணிக்க முயல்கிறது. மறு புறத்தில், பிரதமர் மோடி நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்தும் தெரிவிக்கிறார். என்னே ஒரு இரட்டை வேடம்!

கம்யூனிஸ்ட்களின்வரலாற்றுப் பங்கு

மொழிவழி மாநிலம் என்ற கோரிக்கையில் முன்பின் முரணில்லாமல், ஒரே மாதிரி பேசியது கம்யூனி ஸ்ட்களே. 1954ஆம் ஆண்டு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் மொழிவழி மாநிலம் என்பதை அழுத்தமாக வலியுறுத்தியது. மொழிவழி மாநிலங்கள் அமைய வேண்டிய மாநிலங்களையும் பட்டியலிட்டது.தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆந்திர மாநிலம் அமைக்க வேண்டும்என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். விசால ஆந்திரம், ஐக்கியகேரளம், சம்யுக்தமகாராஷ்டிரா என்று மொழிவழி மாநிலங்களுக்காகப் போராட்டங்களில் கம்யூனிஸ்ட்கள் முன்னின்றார்கள். இத்தகைய போராட்டங்களின் விளைவாகவே, 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மொழிவழி மாநிலங்கள் மலர்ந்தன. நவம்பர் 1ஆம் தேதிக்கு உள்ள வரலாற்றுமுக்கியத்துவத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

சென்னை மாகாணத்திலிருந்து ஒரு பகுதி ஆந்திராவுக்கும், ஒரு பகுதி கேரளத்திற்கும், ஒரு பகுதி கர்நாட கத்திற்கும் சென்ற நிலையில், இப்போதுள்ள தமிழ்நாடு நிலப்பரப்பு உறுதிப்படுத்தப்பட்ட நாளாக நவம்பர் 1 விளங்குகிறது. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என்று அந்த மாநிலங்கள் அழைக்கப்பட்டாலும், தமிழ்நாடுஎன்ற பெயரைச் சூட்ட அன்றைய காங்கிரஸ் கட்சி உடன்படவில்லை. சென்னை மாகாணம் என்றே தொடர்ந்து அழைக்கப்பட்டது.இந்தப் பின்னணியில்தான் காங்கிரசைச் சேர்ந்த விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார் 77 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் தியாகம் செய்தார். விருதுநகரில் அவரது போராட்டப் பந்தல் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களாலேயே பிரித்து எறியப்பட்டபோது, அவருக்கு காவலாகநின்றவர்கள் கம்யூனிஸ்ட்கள். இதனால்தான் அவர் தனது மரண சாசனத்தில், இறந்த பிறகு தனது உடலைக் கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதன்படி,கட்சியின் தலைவர்களான தோழர்கள் கே.டி.கே.தங்கமணி, கே.பி.ஜானகியம்மாள் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று பதிவேட்டில் கையெழுத்திட்டு சங்கரலிங்கனார் உடலைப் பெற்று இறுதி நிகழ்ச்சியை நடத்தினர்.

தமிழகச் சட்டப் பேரவையில் தமிழ்நாடு என்று சென்னை மாகாணத்திற்குப் பெயர் சூட்டக் கோரி, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தீர்மா னம் கொண்டுவருவதும், ஆளும் காங்கிரஸ் அதை முறியடித்து, தமிழ்நாடு என்று வைத்துவிட்டால் சோறு கிடைத்துவிடுமா என்று ஏகடியம் பேசுவதும் நடந்தது.

1963ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தோழர் பி. ராமமூர்த்தி தீர்மானம் கொடுத்திருந்தார். அது விவாதத்திற்கு வந்த நாளில், அவர் அவையில் இருக்க முடியாத சூழலில்,வங்கத்தைச் சேர்ந்த தோழர் பூபேஷ் குப்தா அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அந்தத் தீர்மானத்தின் மீது அவர் பேசியதுபொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்கது. “மாநிலத்தின் பெயரை மாற்றுவது வெறும் பெயர் மாற்றம் அல்ல; அது மக்களின் பண்பாட்டு அடை யாளம் மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடையது. தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு,இலக்கியம் ஆகிய வற்றின் சிறப்பை மாநிலத்தின் பெய ரில் பிரதிபலிக்க வேண்டும். தமிழ்நாடு மக்களின் நெடுநாள்விருப்பத்தை நிறைவேற்றுவதில் நாடாளுமன்றம் தலையிட வேண்டும்” என்றார்.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசும்போது அண்ணா கூறினார்:“என் நண்பர் பூபேஷ் குப்தாவுடன் நான் முழுமையாக ஒத்துப் போவதுமிகவும் அரிது. ஆனால் இன்று அவரைமுழு மனதுடன் முழுமையாகவும், உண்மையாகவும் ஆதரிக்க எழுந்துள்ளேன். ஒரு உறுப்பினர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதால் என்ன பயன் என்று கேட்கிறார். நாடாளு மன்றத்தை லோக் சபா என்று மாற்றியதால் என்ன பயன்? மாநிலங்களவை யை ராஜ்ய சபா என்று மாற்றியதால் என்ன பயன்? குடியரசுத் தலைவரை ராஷ்டிரபதிஎன்று அழைப்பதால் என்ன பயன்? அதனால் என்ன இழப்பு?மெட்ராஸ் என்பது தலைநகரத்தின் பெயர். தமிழ்நாடு என்பது மாநிலத்தின்பெயராக இருக்க வேண்டும். மாநி லத்தின் பெயரும், தலைநகரத்தின் பெயரும் வேறுபட்டு இருக்க வேண்டும்.”1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்குவந்த நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாவின் ஆட்சியில்தான் 1967 ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் தீர்மானம் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்ற மற்றும் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு, 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடை முறைக்கு வந்தது.ஜூலை 18ஆம் தேதி ஒரு பொன்னாள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில்நவம்பர் 1ஆம் தேதி மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு மலர்ந்த நாள் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்.

வரலாற்றுப் பதிவுகளில் விடுபட்ட உண்மைகள்

தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே என்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை 3.11.2026 முரசொலி ஏட்டில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், நவம்பர் 1ஆம் தேதியை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாகக் கடைப்பிடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி தீர்மானம் கொண்டுவந்த தோழர் பி. ராமமூர்த்தி பெயரோ, தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இல்லையென்றபோதும் கட்சியின் அடிப்படைக் கொள்கை என்றவகையில் முன்மொழிந்து பேசியதோழர் பூபேஷ் குப்தா பெயரோ ஒரு இடத்தில்கூட இடம்பெறவில்லை என்பதுவியப்பளிக்கிறது. வரலாற்றைப் பதிவு செய்யும்போது வழுவின்றிச் செய்ய வேண்டுமல்லவா?ராஜாஜி ‘தட்சிணப் பிரதேசம்’ என்ற பெயரில் குறுக்குச்சால் ஓட்டியபோது, அதை எதிர்த்து மொழிவழி மாநிலத்தை வலியுறுத்தி 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம்நாள் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, தமிழரசுக் கழகம் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கூடி,முழுக்கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அன்று சென்னையில் நடந்த ஊர்வலத்தின்போது, தோழர்கள் ஜீவாவும் எம்.ஆர். வெங்கட்ராமனும்காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இரு தலைவர்களுக்கும் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆம், தமிழ்நாடு உருவான வரலாற்றில் கம்யூனிஸ்ட்களின் ரத்தம் என்பதை யாரும் மறுக்க முடியாதுதிருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டைப்பகுதியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக 1945 முதல் 1956 வரை நடைபெற்ற எல்லைப் போராட்டத்தில் மார்ஷல் ஏ.நேசமணி, ம.பொ. சிவஞானம் ஆகியோருடன் இணைந்து நின்றனர் பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் ஜீவா, ஜி. மணி, டி.மணி ஆகியோர் என்பது வரலாறு.இந்தியாவின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், அசாம், திரிபுரா என்று கம்யூனிஸ்ட்கள்ரத்தம் சிந்திப் போராடியுள்ளனர்; இன்றைக்கும் போராடுகிறார்கள். அதே நேரத்தில், மொழிவழி மாநிலங்களுக்காகத்துவங்கிய கம்யூனிஸ்ட்களின் போராட்டம் மாநில உரிமைக்காகவும் பன்முகப் பண்பாட்டைப் பாதுகாப்ப தற்காகவும்தொய்வின்றித் தொடர்கிறது.

மாநில உரிமைகளைக் காப்போம்

இன்றைய தமிழ்நாடு எனும் மொழிவழி மாநிலம் உருவான வரலாற்றில் நவம்பர் 1, ஜூலை 18 ஆகிய இரு நாட்களுமே மிகவும் முக்கியத்துவ மானவை. இந்த நாட்களைக் கொண்டாடும் அதே நேரத்தில், ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக மாநில உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலில் இருந்த கல்வி, கொஞ்சம் கொஞ்சமாக மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பில் மூர்க்க மாக ஈடுபடுகிறது ‘ஜனபாதம்’ தொட்ட ஜனசங்கத்தின் இன்றைய வடிவமான பாஜகவின் ஆட்சி.மாநிலங்களின் நியாயமான நிதிப் பங்கீடுகூட மறுக்கப்படுகிறது. சட்ட மன்றங்களில் ஒருமனதாக இயற்றி அனுப்பப்படும் தீர்மானங்கள் தில்லி தர்பாரின் தாழ்வாரங்களில் கேட்பா ரற்றுக் கிடக்கிறது. மத்தியில் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படுவது எதேச்சதிகாரத்திற்கே வழிவகுக்கும். ஜனநாயகத்தின் வலிமை என்பதுமாநிலங்கள், உள்ளாட்சி அமைப்பு கள், கூட்டுறவு அமைப்புகள் என வேர் வரை நீர் பாய்வதாக அமைய வேண்டும். மாநில உரிமைகளைக் காத்து நிற்பது அனைத்து ஜனநாயக மதச்சார்பற்றமுற்போக்கு சக்திகளின் இன்றைய மிக முக்கிய பணியாக அமைந்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.