தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

31 Oct 2026, 11:38 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆண்டுதோறும் நவம்பர் 1 ‘தமிழ்நாடு நாள்’ அரசு அறிவிப்பு

சென்னை, அக்.31-தமிழ்நாடு உருவாக்கப் பட்ட 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஐப் பெருமைப் படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அந்நாள் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் அரசு சார்பில் சிறப்பாகக் கொண் டாடப்படும் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.இன்று (நவ.1) காலை 10 மணிக்குச் சென்னை அருங்காட்சியக அரங்கில் விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர் ராஜ்மோகன், 76 அறிஞர்களுக்குத் ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளையும் அவர் வழங்கவுள்ளார்.

பெட்ரோல் ஏற்றுமதிக்கு மோடி அரசு தாராளம்!

புதுதில்லி, அக்.31-திருத்தப்பட்ட வரி விகிதங்கள் தொடர்பான அறிவிக்கைகளை ஒன்றிய நிதி அமைச்சகம், இன்று (அக். 31) அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன் படி, ‘பெட்ரோல் ஏற்றுமதிக்கான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ. 2.5-ல் இருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் அதிக லாபம் கிடைப்பதால், எண் ணெய் சுத்திகரிப்பு நிறுவன முதலாளிகள் ஏற்றுமதியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அவர்கள்மேலும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு, வரியை முற்றிலுமாக மோடி அரசு நீக்கியுள்ளது. இந்தியாவிலிருந்து டீசல் ஏற்றுமதி 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள சூழலில், அதிவேக டீசல் (high-speed diesel) ஏற்றுமதிக்கான வரியை மட்டும் லிட்டருக்கு ரூ. 8.5-ல் இருந்து ரூ. 11.5 ஆக உயர்த்தியுள்ளது.

அரசு ஊழியர்க்கு 3 சதவிகித அகவிலைப்படிஉயர்வு!

சென்னை, அக்.31-தமிழக அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 60 சதவிகிதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 1.7.2026 முதல் அகவிலைப் படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அதே நாளிலிருந்து இது அமலாகும். இதன் மூலம் சுமார் 16 லட்சம் அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1,858 கோடி கூடுதல்செலவு ஏற்படும்.

கனிம லாரிகளுக்கு இன்று முதல்ஜிபிஎஸ் கட்டாயம்

சென்னை, அக்.31-ஏஐஎஸ்-140 (AIS-140) தரநிலை ஜிபிஎஸ் கருவி பொருத்தி, சுரங்கத்துறையின் MiMaS தளத்தில் இணைக்காத கனிமவள வாகனங்களுக்கு, நவம்பர் 1 முதல் போக்குவரத்து அனுமதிச் சீட்டு வழங்கப்படாது என்று புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவித்துள் ளது. கருவி அல்லது செல் லத்தக்க சீட்டு இல்லாமல் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக் கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.