தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம்: முதல்வர் விஜய், பிரதமர் மோடி வாழ்த்து

1 Nov 2026, 9:18 pm
‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம்: முதல்வர் விஜய், பிரதமர் மோடி வாழ்த்து

‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம்: முதல்வர் விஜய், பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை, நவ.1 -தமிழ்நாடு மாநிலம் உருவான 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியைப் போற்றும் வகையில், இந்நாள்‘தமிழ்நாடு நாளாக’ ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் விஜய்

எக்ஸ் தளத்தில் முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவான இந்நாளில் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றுவதாகக் குறிப்பிட்டார். அன்னைத் தமிழுக்குப் புகழ் சேர்க்கவும், தமிழர்களின் கலை, பண்பாடு, பாரம்பரியத்தைப்பேணிக் காக்கவும் இந்நாளில் உறுதியேற்போம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடி

உற்பத்தி, வாகனம், ஜவுளி, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் தனித்துவமிக்க சிறப்புடன் விளங்குவதாகவும், தமிழ்க் கலாச்சாரம் நாட்டின் நாகரிகப் பயணத்தைச் செழுமைப் படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இந்நாள் தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும் வெற்றியையும் புதிய வாய்ப்புகளையும் வழங்கட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மெரினாவில் கலைவிழா

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் மாலை 6 முதல் இரவு 9 மணி வரை தமிழ்நாடு நாள் விழா நடைபெற்றது. பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்ட இவ்விழாவில் துடும்பாட்டம், சிலம்பாட்டம், நவீன நாடகம், தப்பாட்டம், புலியாட்டம், தோல்பாவைக் கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, வள்ளுவர் கோட்டம், பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா ஆகிய இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.