கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனடியாக நடத்திடுக! தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்
8 Jun 2026, 9:45 pm
<p><strong>கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனடியாக நடத்திடுக! தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்</strong></p><p>மதுரை, ஜூன் 8- தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் மாநிலக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மதுரையில் உள்ள மூட்டா அரங்கில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் த.பன்னீர்செல்வம் தலை மையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக் குழுத் தேர்தலை தாமத மின்றி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் சிஐடியு மாநில உதவிப் பொதுச்செய லாளர் கே.ஆறுமுக நயினார், சம்மேளனத்தின் மாநி லப் பொதுச்செயலாளர் மு.துரைச்சாமி, மாநிலச் செயல் தலைவர் பி.கௌதமன், மாநிலப் பொருளா ளர் ஆ.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டுறவுத் துறையில் ஜனநாயக நடைமுறை களை உறுதி செய்யும் வகையில், கூட்டுறவுச் சங்கங்க ளின் நிர்வாகக் குழுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்க ளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வு கால நிதிப் பலன்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நடைமுறைகள் கைவிடப்பட வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள ஒருங்கிணைந்த வளத் திட்டமிடல் மென் பொருளின் நம்பகத்தன்மையை முழுமையாக உறுதி செய்யாமல் அதனை கட்டாயப்படுத்தக் கூடாது. நியாயவிலைக் கடைப் பணியாளர்களை 12 மணி நேரம் பணியாற்ற வற்புறுத்துவதை நிறுத்த வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடை ஊழியர் களுக்கும் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலைக்குரிய 3 சதவீத ஊதிய உயர்வை முழுமையாக வழங்க வேண்டும். காலியாக உள்ள எடையாளர் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களை தரமான பாக்கெட் முறையில் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமி ழக அரசின் கவனத்திற்கு விரிவான மனு அனுப்பப் பட்டுள்ளதாக மாநிலப் பொதுச்செயலாளர் மு. துரைச்சாமி தெரிவித்தார்.</p>
