புதிய பணியிடங்களை உருவாக்காமல் பணிநிரவல் செய்வதா? தொகுப்பூதிய செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு!
21 Jul 2026, 9:54 pm
<p><strong>புதிய பணியிடங்களை உருவாக்காமல் பணிநிரவல் செய்வதா? தொகுப்பூதிய செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு!</strong></p><p>சென்னை, ஜூலை 21 - தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரத்தைத் தடுக்கும் நடவ டிக்கைகளை அரசு கைவிடக்கோரி செவ்வாயன்று (ஜூலை 21) டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பெருந்திரள் முறையீட்டுப் போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவைப்படும் செவிலியர்களை புதிய நியமனங்கள் மூலம் நிரப்பாமல், அரசு ஆரம்ப சுகா தார நிலையங்களில் பணியாற்றும் 192 செவிலியர், அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் 100 செவி லியர் என 292 செவிலியர்களை பணி நிரவல் என்ற பெயரில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்ற போராட்டத்தையொட்டி பேச்சு வார்த்தை நடத்திய அப்போதைய அமைச்சர், புதிய திட்டங்கள் தொடங் கும்போது, நிரந்தர பணியிடங்கள் உரு வாக்கப்பட்டு, அந்த இடங்களில் 6500 தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித் தார். இதற்கு மாறாக, தற்போது தொகுப் பூதிய செவிலியர்களின் பணி நிரந்த ரத்தை பறிக்கும் வகையில், 292 பணி யிடங்களை பணிநிரவல் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, இதனைக் கண்டித்தும், தொகுப் பூதிய செவிலியர்களுக்கு பணிநிரந்த ரம் வழங்கக் கோரியும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் கு. சசிகலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி. கோபிகுமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ஜி. ராணி, சங்கத்தின் பொதுச்செயலாளர் நே. சுபீன், பொருளாளர் ச. ஹேமச் சந்திரன், துணைத்தலைவர் அஸ்வினி கிரேஸ் உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதனைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் ராஜ்மோகனிடம் தலை வர்கள் மனு அளித்து பேசினர். அப்போது, புதிய பணியிடங்களை உரு வாக்குவதற்கான முன்மொழிவு தயா ரிப்புப் பணி விரைந்து முடிக்கப்படும். மறுசீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கை கள் தொடர்பாக அமைச்சருடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும். சங்கத்துடன் ஓரிரு வாரங்களில் விரி வான அளவில் பேச்சுவார்த்தை நடத்தப் படும் என்று உறுதியளித்தார்.</p>
